உடல் நலம் காக்கும் பாலி பினால்கள்
செம்பருத்தி பூவினால் தயாரிக்கப்படும் தேநீரில் பாலி பினால்கள் (Polyphenols) என்னும் உயர் அடர்த்தியுள்ள ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இயற்கை வேதிப்பொருட்கள் அல்லது கலவைகள் உள்ளன. இவை நம் உடலின் இடுப்பளவை குறைக்கின்றன. இதயம் நலமுடன் செயல்பட உதவுகின்றன. இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. தாவரங்களில் அடங்கியுள்ள இவை முதுமையை தாமதப்படுத்த உதவுமா? அல்சைமர்ஸ் போன்ற குறைபாடுகளை சமாளிக்க பயன்படுமா? பிரபலமடைந்துவரும் பாலி பினால்கள் “விஞ்ஞானிகள் இத்தாவர வேதிப் பொருட்களின் பயன்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில் பாலிபினால்கள் என்ற இச் சொல் பொதுமக்களிடையில் கற்ப னைக்கும் அப்பாற்பட்ட ஆதரவைப் பெற்று வருகின்றது. பரவலாக இப்போது இது பற்றி பேசப்படுகிறது. இவை இதய நலம், உடல் வளர் சிதை மாற்றத்தை மேம்படுத்துவது முதல் அல்சைமர்ஸ் (Alzheimer’s) உள்ளிட்ட நரம்புத் தளர்ச்சி (Neurode generative)நோய்களின் ஆபத்தை குறைப்பது வரை எண்ணற்ற பயன் களைத் தருகின்றன. பாலிபினால்கள் அடங்கிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தோல் முதுமையடை வது தாமதமாகிறது. இடுப்பளவு குறைவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று உணவி யல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஜியுலியா கிரவுச் (Giulia Crouch) கூறுகிறார். பாலி பினால்கள் என் பவை பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் (Phytonutrients) எனப்படும் இயற்கை அல்லது தாவரங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை குழு வாக உள்ள வேதிப்பொருட்கள். இவை தாவரங்களை பூச்சிகள், புற ஊதாக் கதிர்களில் இருந்து பாது காக்க உதவுகின்றன. உணவில் சேர்த்துக்கொள்ளும்போது இவை நம் உடல் நலத்திற்கும் உதவுகின்றன. ஆழமான, தெளிவான நிறங்களில் உள்ள பீட்ரூட், கறுப்பு பெரி, கறுப்பு ஆலிவ், செஞ்சிவப்பு நிறம் உள்ள தக்காளி, அடர் நிறமுடைய பச்சை இலைக் காய்கள் போன்ற பழங்கள், காய்களில் அதிக அளவில் காணப் படுகின்றன. நல்ல சுவையுடைய இவை வலுவான நிறமிகளைப் பெற்றுள்ளன. காபி, தேநீர், சாக்லேட் போன் றவை இப்பொருட்கள் அதிகமுள்ள சிறந்த மூலங்கள். சிவப்பு வைனில் உள்ள ரெஸ்வெரட்ரால் (resveratrol), வால்நட்டில் உள்ள எலாஜிக் அமிலம் (ellagic acid) , தேநீரில் உள்ள கேடெச்சின்கள் (catechins) போன்ற சிலவற்றை தவிர, பல பொருட்களை விஞ்ஞானிகள் இன் னும் கண்டுபிடிக்கவில்லை என்றா லும் பைட்டோநியூட்ரியண்ட்டுகளில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. ஒற்றை உள்ளடக்கப் பொருட்கள் உள்ள உணவுகளில் பல பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. தக்காளியில் பிளேவனாய்டுகள் (flavonoids), பிளேவனான்கள் (flavanones), கரோடினாய்டுகள் (carotenoids), லைக்கோபின் (lycopene), பைட்டோன் (phytoene) மற்றும் பீட்டா கரோட்டின்கள் (beta carotene) உள்ளன. இவை அணைத்தும் வேறுபட்ட நன்மைகளை தருகின் றன. கோக்கோவில் உள்ள பிளே வனால்கள் பக்கவாதம், மார டைப்பை குறைக்க உதவுகின்றன. தாவர வேதிப்பொருட்களின் பேருலகம் பசுமைத் தேநீரில் உள்ள கேடெச் சின்கள் நம் உடல் வளர்சிதை செயல் பாட்டில் நேர்மறை நன்மைகளை ஏற்படுத்துகின்றன. இடுப்பின் சுற்ற ளவை குறைக்கின்றன. உடற்பரு மன் குறியீட்டைக் குறைக்க உதவு கின்றன. நாம் உண்ணும் உணவில் உள்ள பாலிபினால்கள் சிக்கலான அமைப்பை வெளிப்படுத்துகின்றன. இவை மகத்தானவை. தாவரங்கள் நமக்கு நேரடியாக நார் சத்து, வைட்டமின்களை அளிப்பதில்லை. தாவரக் கூட்டுப்பொருட்கள் என்னும் பேருலகில் உள்ளவை நம் ஆரோக்கி யத்திற்கு என்றும் உதவுபவை. செம்பருத்தியில் உள்ள பாலி பினால்கள் இரத்த அழுத்தம் குறைய உதவுகின்றன. இது மகிழ்ச்சி தரும் செய்தி” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பொது மருத்துவப் பள்ளி ஆய்வாளரும் சோயி (Zoe) என்ற ஆரோக்கிய அறிவியல் செயலி தலைமை உணவியலாளருமான டாக்டர் பெடரிக்கா அமார்ட்டி (Dr Federica Amati) கூறுகிறார். “இப் பொருட்கள் அதிக அளவில் உள்ள உணவுகளை உண்பது பல்வேறு நாள்பட்ட நோய்களின் தீவிர பாதிப்பைக் குறைக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ப வர்களுக்கு மற்றவர்களை விட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 46% குறைகிறது. இவை மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. உட லில் ஏற்படும் வீக்கத்தை தடுக்க உதவு கின்றன. ஆனால் இவை நம் உட லில் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றிய புரிதல் முழுமையாக நமக்கு இன்னும் ஏற்படவில்லை. இவற்றின் செயல்முறை பற்றி ஆராயப்பட்டுவருகிறது. இவை நம் உடலால் குறிப்பிடத்தக்க அளவு மாற்றப்படுகின்றன. இப்பொருட்கள் பற்றி மேலும் ஆராயப்படவேண்டும். நம் உடலில் செயல்படும் விதத்தின் மூலம் இவை நமக்கு நன்மை செய்கின்றன. குட லில் உள்ள நுண்ணுயிரிகள் இவற்றை உணவாக உண்கின்றன. குடல் நுண்ணுயிரிகள் இவற்றை சிறிய, சுலபமாக உறிஞ்சக்கூடிய வளர்சிதை மாற்றத்திற்கான வேதிப்பொருட்களாக மாற்றுகின் றன. இந்த ஆய்வு வருங்காலத்தில் இவை பற்றிய புரிதலை மேம்படுத்த உதவும். குடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இவற்றை மீண்டும் வெளிச்சத்திற்கு அழைத்துவந்துள் ளது” என்று இத்தாலி பாமா (Parma) பல்கலைக்கழக மனித சத்துணவி யல் பேராசிரியரும் க்ளாஸ்கோ பல்க லைக்கழக ஆய்வாளரும் கடந்த 23 ஆண்டுகளாக இவை பற்றி ஆரா யும் விஞ்ஞானியுமான டானில் டெல் ரியோ (Daniele Del Rio) கூறுகிறார். 90களில் சிவப்பு வைன் மற்றும் ப்ரெஞ்சு பாரடாக்ஸ் (French paradox) போன்றவற்றில் ஏற்பட்ட மக்களி டையில் ஏற்பட்ட ஆர்வம் இப்பொருட் கள் பற்றிய ஆய்வுகளை அதிக ரித்தன. புதிய ஆய்வுகள் புதிய நம்பிக்கை “நம் உடல் நலத்தில் உணவின் முக்கியப்பங்கு, சிறுகுடலில் நுண்ணுயிரிகள் பங்கு பற்றி பொதுமக்களிடையில் இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அதிக ரித்துவருவதால் பாலிபினால்கள் பற்றி இப்போது அதிகம் பேசப்படு கிறது. பலதரப்பட்ட பைட்டோ நியூட்ரி யண்ட்டுகளை பெற பழங்கள், காய் கள், இருவித்திலை தாவரங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மருத்துவச் செடிகள், விதைகள், வாசனைப்பொருட்கள் போன்ற காய்கறிகளை உணவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும். “100 கிராம் கிராம்பில் 1,600 மில்லி கிராம் என்ற அளவிலும் 100 கிராம் இலவங்கப் பட்டையில் 9,700 மில்லி கிராம் என்ற அளவிலும் பாலிபினால் கள் உள்ளன. இவை அதிக விலை யுடையவை அல்ல. 100 கிராம் கறுப்பு பீன்ஸில் 4,800 மில்லி கிராம் என்ற அளவிலும் 100 கிராம் காட்டு நீல பெரியில் 650 மில்லி கிராம் என்ற அளவிலும் பாலி பினால்கள் உள்ளன. எல்லா சத்துகளும் அடங் கிய உணவுகளைப் பயன்படுத்து வதன் மூலம் இப்பொருட்கள் நம் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற் கும் பெருமளவில் உதவும். இவை நாட்பட்ட நோய்களை தீர்க்கும் அற்புதப் பொருட்கள் அல்ல. ஆனால் இவை நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உறுதி யாக உதவுகின்றன என்று விஞ்ஞானி கள் நம்புகின்றனர்.