நேற்றையும் நாளையையும் இன்றே பார்க்கலாம்
நேற்றைய தினத்தையும் நாளைய தினத்தையும் இன்றே பார்க்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? என்ன, கால இயந்திரம் எனும் டைம் மிஷினில் ஏறி கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணிக்கலாம் என்ற கதை போல இருக்கிறதே, என்று நினைக்கலாம். நேற்றையும் நாளையும் இன்றே பார்க்கலாம். இது மந்திரமல்ல! மாயஜாலம் அல்ல! கட்டுக்கதை அல்ல! முழு அறிவியல் ! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கும் ரஷ்யா வின் சைபீரியா மாகாணத்திற்கும் இடையே பெரிங் ஜலசந்தி உள்ளது. ( ஜலசந்தி என்றால் இரு கடல்கள் இணையும் இடம்) இந்த ஜலசந்திக்கு நடுவில் டியோ மெட் என்ற தீவு உள்ளது. இந்த தீவு ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு ஒரே நிலப்பரப்பாக இல்லாமல் இரு தீவு போல அமைந்துள்ளது. இதில் பிக் (பெரிய) டியோமெட் தீவு ரஷ்யாவிற்கு சொந்தமானது. மற்றொரு தீவு லிட்டில் (சிறிய) டியோமெட் என்று அழைக் கப்படுகிறது. இது அமெரிக்காவின் எல்லையில் உள்ளது. பிக் டியோமெட் தீவுப்பகுதி லிட்டில் டியோமெட்டை விட கிட்டத்தட்ட ஒரு நாள் முன்னால் உள்ளது. அதாவது பெரிய டியோமெட் தீவில் பகல் என்றால் லிட்டில் டியோ மெட் தீவில் இரவு. இந்த இரு தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் என்ன தெரியுமா? வெறும் 5 கிலோமீட்டர் தான். குளிர்காலத்தில் இந்த கடல் பகுதி முழுவதும் உறைந்து போய் இருக்கும் அப்போது வெறும் 1 மணிநேரத்தில் ஒருவரால் நடந்தே நாளைக்கும் போக முடியும் நேற்றைக்கும் போக முடியும். உள்ளூர் நேர மண்டலங்கள் காரணமாக, பெரிய டியோ மெட் தீவானது சிறிய டியோமெட்டை விட 21 மணிநேரம் முன்னால் உள்ளது. கோடை காலத்தில் இது 20 மணிநேர மாக உள்ளது. இதன் காரணமாகவே இத்தீவுகள் சில நேரங்களில் நாளை தீவு (பெரிய டயோமெட்) மற்றும் நேற்று தீவு (சிறிய டயோமெட்) என்று அழைக்கப்படுகின்றன. பிக் டியோமெட் தீவுடன் (நாளை தீவு) ஒப்பிடும்போது, ஸ்மால் டியோமெட் தீவு (நேற்று தீவு) எப்போதும் கடந்த காலத்தில் உள்ளது. பழங்குடி மக்களான எஸ்கிமோக்கள் மட்டுமே இத்தீவு களுக்கு இடையே சுதந்திரமாக பயணிக்க முடியும். எஸ்கி மோக்கள் இந்த இரு தீவு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வந்துள்ளனர். உறவினர்களைப் பார்க்க எஸ்கி மோக்களுக்கு விசா இல்லாத பயணம் வழங்கப்பட்டது. இந்த இரு தீவுகளுமே ரஷ்யாவிடம் தான் இருந்தது. 1867 ஆம் ஆண்டு ரஷ்யா அலாஸ்காவை அமெரிக்கா விற்கு விற்பனை செய்த போது டியோமெட் தீவுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எஸ்கிமோக்கள் லிட்டில் டியோமெட் நகருக்கு குடிபெயர்ந்தனர் (சுமார் 135 பேர் இன்னும் இந்த தீவில் ஒரு சிறிய குடும்பமாக வாழ்கின்றனர்).