articles

img

அக்மார்க் விவசாயி எடப்பாடியாருக்கு மரவள்ளி விவசாயியின் மடல்....

அய்யா, வணக்கம்.

மரவள்ளிக் கிழங்கு தமிழகத்தில் சுமார் 18 மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில், லட்சக்கணக்கான விவசாயிகள் குடும்பம் இச்சாகுபடி பணி செய்து வருகிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.இது பெரும்பாலும் மானாவரி பயிர். பலன்தர ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது. இது ஒன்றுதான் என்னைப்போன்ற சிறு குறு நடுத்தர விவசாயிகளுக்குக் கொஞ்சம் காசு பணத்தைக் கண்ணில் காட்டி வருகிறது. 

அவ்வப்போது ஏற்படும் மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றத்தால் பெருத்தநட்டத்தை சந்தித்து வருகிறோம். இதுஒருபுறம். இன்னொருபுறம் சேலம் சேகோசர்வ் நிர்வாகச் சீர்கேட்டால், தற்போது உள்ளதும் போன கதையாக திண்டாடி வருகிறோம். ஆமாங்க, சென்ற வருடம் சேகோசர்வ் நிர்வாக மேலாளரின் நடவடிக்கையால் சுமார் ரூ.120 கோடியை என் போன்ற விவசாயிகள் இழந்து உள்ளோம்.

மக்காச்சோள மாவு கலப்படம் 
ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் குறைந்த விலையுள்ள மக்காச்சோள மாவை, ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்வதை ரொம்பசகஜமாக்கிட்டாங்க. இதனால் மரவள்ளிக் கிழங்குக்கு விலை கிடைக்காமல் போவதையும் வாடிக்கை ஆக்கிட்டாங்க. இதற்கு சேகோசர்வ்வின் தற்போதைய சேர்மனும் ஒரு காரணம். ஆம், கலப்படத்தைத் தடுக்கஎதையும் செய்யாமல் வெறும் பார்வையாளராக இருக்கிறார். அப்படி இருக்கச் சொல்லி யார் உத்தரவு இட்டாங்களோ தெரியல. அதுமட்டுமல்ல, இவரும் உரிய நடவடிக்கை எடுக்காமல், உணவு பாதுகாப்புத் துறையையும் செயல்படவிடாமல் தடுத்து வருகிறார் என்று வலுவாகப் பேச்சு அடிபடுகிறது. 

வேலியே பயிரை மேய்வதா? 
அதுமட்டுமா? ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்வதற்கு பதிலாக, ஈரப்பதம் குறைவாக உள்ளமக்காச்சோள கலப்பட மாவை கொள்முதல் செய்திட சேகோசர்வ் சேர்மனே உதவி வருகிறார். ஆம், வேலியே பயிரை மேய்கிறது. மக்காச்சோள மாவு சென்ற வருடம் மட்டும் 5 லட்சம் மூட்டைகள் ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்யப்பட்டதாகச் சொல்றாங்க. இதனால் அடிமாட்டு விலைக்கு மரவள்ளிக் கிழங்குகளை விற்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டோம். 2019ஆம் ஆண்டு இ டெண்டர் முறை மாண்புமிகு தமிழக முதல் அமைச்சராகிய நீங்க துவக்கிவைத்தீங்க. இதன் நோக்கமே உற்பத்தி ஆகும்அனைத்து ஜவ்வரிசி மூட்டைகளும் சேகோசர்வ் மூலம் விற்பனைக்கு வருவதும், அதன்மூலம் நல்ல ஆரோக்கிய போட்டியை உருவாக்குவதும், அதன்வழியே சேகோசர்வ் உறுப்பினர்களுக்கு நல்லவிலை கிடைப்பதும், இதன்வழியே மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கும் நல்லவிலை கிடைக்கும் என்பதே ஆகும். 

அதன்படி 2019ஆம் ஆண்டு ஜவ்வரிசி ஒரு மூட்டை ரூ.6000 வரை விற்றது; அதனால் எங்களுக்கும்கூட 75 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.750-800 வரை விலை கிடைச்சிச்சி.சென்ற ஆண்டு (2020) சேகோசர்வ் உறுப்பினர்கள் எங்கு வேண்டுமானாலும் ஜவ்வரிசியை விற்றுக்கொள்ளலாம் என சேகோசர்வ் சேர்மன்வாய்மொழி உத்தரவு பிறப்பித்து விட்டார். அதனால் சுமார் 30 விழுக்காடு ஜவ்வரிசி மட்டுமே சேகோசர்வ் வந்தது; மீதி 70 விழுக்காடு ஜவ்வரிசி வெளிவியாபாரிகள் மூலம் விற்பனைக்குப் போயிருச்சி. இதனால் சென்ற வருடம் ரூ.1000 கோடியை தாண்டிய சேகோசர்வ் வியாபாரம் இந்த வருடம் சுமார் ரூ.300 கோடியை எட்டுவதேசந்தேகமாக இருக்கும் எனச் சொல்றாங்க.வெளிச்சந்தையில் தேவையான அளவு ஜவ்வரிசி கிடைப்பதால், சேகோசர்வ்விற்கு டெண்டர் போடக்கூட வியாபாரிகள் வருவதில்லை. அப்படி வராததால், ஜவ்வரிசிக்கு உரியவிலை கிடைப்பதில்லை. அதனால்தான் மரவள்ளிக்கும் உரியவிலை கிடைக்காத அவலம். “ஜவ்வரிசி அனைத்தும் சேகோசர்வ் மூலம்விற்பனை செய்திட வேண்டும்; மரவள்ளி மேல்தோல்நீக்கப்பட வேண்டும்; ஈர மாவு வியாபாரம் செய்யக்கூடாது” என கடந்த 2015 ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.அதன்படிதான் 90 விழுக்காடு இதுநாள் வரை வியாபாரம் நடந்து வந்தது. தற்போதைய சேர்மன் வாய்மொழி உத்தரவால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காற்றில் பறந்து போயிருச்சி. விவசாயிகளின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகி போச்சி.

இ டெண்டரிலும் கொடிகட்டி பறக்கும் ஊழல்கள் 
மேலே குறிப்பிட்டதைப்போல் சேகோசர்வ் ஆரம்பித்ததன் நோக்கமே ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவுக்கு உரிய விலையும், அதன்மூலம்மரவள்ளிக்கு கட்டுபடியான விலையும் கிடைக்கச்செய்வதுதான். ஆனால் தற்போதைய சேர்மன் நிர்வாக சீர்கேட்டால் இவை அனைத்தும் நாசமாப்போச்சி.

 இ டெண்டரில் 70 முதல் 80 சேம்பிள் எடுப்பதற்குப் பதிலாக 150 முதல் 350 சேம்பிள்கள் எடுத்து உறுப்பினர்களை நிர்பந்தம் செய்து மார்க்கெட் விலையை குறைப்பது. 

அதிகபட்சமான ஏலத்தில் போகும் ஜவ்வரிசி விலையை குறைத்து ஏதாவது காரணம்சொல்லி கேன்சல் செய்து மார்க்கெட் விலையைகுறைப்பது. 

டெண்டரில் விலை உயரும்போது அதிகமாக விலை ஏறுவதைத் தடுக்க கணினியில் நூதனமாக குளறுபடி செய்து விலை ஏறாமல் சதிசெய்வது. 

இண்டர்நெட் சேவை மிகவும் ஸ்லோவாகஇருக்க வைத்து பல வியாபாரிகள் போட்டி போடாமல் தடுப்பது; அல்லது குறைந்த விலைக்கு ஏதாவது ஒரு வியாபாரிக்கு கன்ஃபார்ம்செய்து விலையேற்றத்தை தடுப்பது. இப்படித்தான் சீர்கேடுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. மேலும் இது சில குறிப்பிட்ட வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதால், இச்செயல்பாடு சேகோ உற்பத்தியாளர்களைக் காட்டிலும் மரவள்ளி விவசாயிகளுக்குத்தான் பெரும் பாதகமாக இருக்குது.எனவே கீழ்க்காணும் நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும்.இ டெண்டர்முறையிலும் சில வியாபாரிகள் மட்டுமே சாதகம் அடைகிறார்கள் என்பதே உண்மை. மரவள்ளி விவசாயிகளும், பெரும்பாலான சேகோ உற்பத்தியாளர்களும் அழிவின்விளிம்புக்கு போய்விட்டார்கள். எனவே பழையபடி மறைமுக டெண்டர் முறையை அமலாக்குவதுமூலம்தான் சேகோஉற்பத்தியாளர்களுக்கும், மரவள்ளி விவசாயிகளாகிய எங்களுக்கும் ஓரளவிற்காகவது நல்லவிலை கிடைக்க வழிபிறக்கும். 

மேலும் மரவள்ளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு முழுநேரமும் செயல்படக்கூடிய ஒரு நேர்மையான ஐஏஎஸ் அலுவலரை சேர்மனாக உடனடியாக நியமித்து, மரவள்ளி விவசாயத்தையும், கலப்படமில்லாத ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியையும் உறுதிப்படுத்திட தாங்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சேகோசர்வ் சேர்மனின் படுமோசமான நிர்வாகத்தால் தினந்தோறும் ஒரு நாளைக்கு 5000 மூட்டைக்குமேல் வரி ஏய்ப்பு செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்குகாரணமாக சேகோசர்வ்வில் டெண்டர் போடுவதில் வியாபாரிகள் மத்தியில் பெருமளவு சுணக்கம்நிலவுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வணிகவரித்துறை உதவியுடன் 2014-15/7.9.2015ல்வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைசேகோசர்வ் நிர்வாக இயக்குநர் அமலாக்கிட வேண்டும், சேர்மனின் ஊழல் மிகுந்த நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து, மரவள்ளி விவசாயத்தையும், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்திதொழிலையும் பாதுகாத்திட வேண்டும். 

                                                                                                                                                    நன்றி....  

இப்படிக்கு, 

பி.தங்கவேலு, மரவள்ளி விவசாயி., சேலம் 

;