articles

வண்ணத்துப்பூச்சிகளுக்காக ஒர் காட்சிக் கூடம்

வண்ணத்துப்பூச்சிகளுக்காக ஒர் காட்சிக் கூடம்

உத்தரகண்ட் டெஹ்ராடூன் ஜாலி கிராண்ட்டில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான ஒரு காட்சிக் கூடத்தை இயற்கைக் கல்வி மையத்தில் அம்மாநில வனத் துறை ஆய்வுப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட்டின் வண்ணத்துப்பூச்சிகளின் உயர் தொழிநுட்பப் படங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கூடம் தனித்துவம் மிகுந்த வண்ணத்துப்பூச்சி கள் பற்றி அறிய உதவும் கல்வி, விழிப்புணர்வு தள மாக, மகரந்தச் சேர்க்கை, உணவுச்சங்கிலிகள் மற்றும்  ஒட்டுமொத்த சூழல் மண்டலங்களில் ஆரோக்கி யத்தை நிலை நிறுத்த இவை ஆற்றும் பங்கை எடுத்துக்  காட்டும் இடமாக அமையும்” என்று வன ஆய்வு மைய  தலைமை அலுவலர் சஞ்சித் சதுர்வேதி (Sanjiv Chaturvedi) கூறுகிறார். சூழல் மண்டலத்தில் இவற்றின் பங்கு குறித்த அறிவை விரிவாக்க, மாநில வண்ணத்துப்பூச்சி பன்மயத்  தன்மை, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உயிரி னங்களின் இன்றியமையாமையை அங்கீகரித்து பாராட்ட இந்தக் கூடம் உதவும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் இவற்றின் பாதுகாப்பு வலுவடையும். உத்தரகண்ட்டை தாயகமாகக் கொண்டு ஐநூறு வண்ணத்துப்பூச்சி இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் பாப்லியோனிடே (Papilionidae), ஹெஸ்பரிடே (Hesperidae) , லைக்கனிடே (Lycanidae), நிம்ஃபலிடே (Nymphalidae) மற்றும் பியரிடே (Pieridae) ஆகிய ஐந்து இனங்களைச் சேர்ந்த  105 வண்ணத்துப்பூச்சிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

மயில் வண்ண வண்ணத்துப்பூச்சி

இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அந்தந்த மாநி லத்திற்கு என்று வண்ணத்துப்பூச்சிகளாக அறி விக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரகண்டின் மாநில வண்ணத்துப்பூச்சியான, பல வண்ணங்களுடன் கண்ணைக் கவரும் நீலப் பச்சை நிறத்தில் பளபளக்கும்  பொதுவான மயில் வண்ணத்துப்பூச்சியும் (Common Peacock) இவற்றில் ஒன்று.  மூடப்பட்ட இறக்கைகளுடன் இருக்கும் போது வறண்ட ஓக் இலை வண்ணத்துப்பூச்சியை போல தோற்ற மளிக்கும் ஏமாற்று வித்தையில் கை தேர்ந்த இந்தியன் ஓக் இலை (Indian Oakleaf) வண்ணத்துப்பூச்சி, பள பளப்பான, கண்ணாடி போல, கறுப்பு நிறத்துடன் மிளி ரும் ஸ்பேங்கிள் (Spangle)  வண்ணத்துப்பூச்சி, வலு வான கறுப்பு நிற இறக்கைகளுடன் சிறப்பு மிக்க சிவப்பு  நிற உடலுடைய காமன் ரோஸ் (Common Rose) வண்  ணத்துப்பூச்சி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. இது தவிர கடினமான சூழ்நிலையிலும் சமாளித்து வாழும் இயல்புடைய, உடலில் தெளிவாக சிவப்பு  மற்றும் கறுப்பு நிற அடையாளங்களை பயன்படுத்தி கண்டறியப்படும்,  உயரமான மலைப்பகுதிகளில் காணப்படும் இந்தியன் ரெட் அட்மிரல் (Indian Red Admiral) உள்ளிட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களும் இங்கு உள்ளன. வெவ்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்களுக்கு முக்கிய வாழிடமாகஇருக்கும் தாவ ரங்கள் பற்றிய தகவல்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

கவிதைகளுடன் ஒரு காட்சிக் கூடம்

இது இந்த காட்சிக் கூடத்தின் சிறப்பு அம்சம். காமன்  காஸ்ட்டர் வண்ணத்துப்பூச்சியின் (common castor butterfly) முக்கிய வாழிடமாக உள்ள அஸ்ட்டார் மரம் (Astor tree), லாமைசியே (Lamiceae) குடும்பத்தைச் சேர்ந்த லெமன் வண்ணத்துப்பூச்சிக்கு (lemon butterfly)  வாழிடமாக இருக்கும் தாவரங்கள்  இடம்பெற்றுள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின் சிக்கலான இறக்கை வடிவமைப்பு பாணிகள், நிறங்கள், பன்முகத் தன்மை யுடன் உள்ள அமைப்பு போன்றவற்றை வருகை யாளர்கள் நெருங்கி உற்றுநோக்கி விரிவாக அறிய  இங்கு வண்ணத்துப்பூச்சிகளின் மாதிரிகள் வைக்கப்  பட்டுள்ளன. ஈர மண்ணில் ஒன்றுகூடி தங்கள் நிலை நிற்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு அவசியமாக உள்ள சத்துகளை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகளின் நடத்தை (mud-puddling habit) பற்றிய சுவாரசிய மான தகவல்களை வருகையாளர்கள் இங்கு காணலாம். முட்டை, புழு, இளம் உயிரின நிலைகளில் இருந்து  இறுதியில் அழகிய உயிரினமாக மாறும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியின் பல்வேறு நிலைகள் இங்கு அழகாக விளக்கப் பட்டுள்ளன. மோனார்க் வண்ணத்துப்பூச்சி பற்றிய தக வல் மற்றும் அவற்றின் மகத்தான வலசையை எடுத்துக்காட்டும் வரைபடக் காட்சி இந்த கூடத்தின் மற்றொரு கவர்ச்சிகரமான அம்சம். உலகின் அதி சிறப்பு மிக்க, இயற்கையின் அதிசய நிகழ்வு என்று வர்ணிக்கப்படும் வலசை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 4,800 கி.மீ. தொலைவு உடையது. இந்த வலசை நிகழ்வில் மோனார்க் வண்ணத்துப் பூச்சிகளின் நான்கு தலைமுறைகளும் பங்கு பெறுகின்றன. மேலும் இந்த காலரியில் வண்ணத்துப்பூச்சிகள் பற்றி ரவீந்திர நாத் தாகூர், ராபர்ட் ஃப்ராஸ்ட் போன்ற புகழ்  பெற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் இல்லாத பூமி வசந்தம் இல்லாத நிசப்த இடமாக மாறிவிடும். அற்புத மான இந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வை இந்த காட்சிக் கூடம் மக்க ளிடையில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.