articles

img

உலக வெள்ளைக்குச்சி பாதுகாப்பு தினம் - பேரா.சோ.மோகனா

அக்டோபர் 15, உலக வெள்ளைக்குச்சி தினம். 1964லிருந்து ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. நம்மில் நிறைய பேருக்கு வெள்ளை குச்சி என்றாலே புரியாது. இதில் வெள்ளை குச்சி தினம் என்றால்... தலையும் புரியாது. வாலும் புரியாது. பார்வைத்திறன் அற்றவர்கள், தாங்கள் நடந்து செல்வதற்குப் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சியையும் அதன் முக்கியத்து வத்தையும் குறிப்பிடுவதற்கான தினம் இது. நான் கூட பார்வைத்திறன் அற்ற சகோதர, சகோதரிகள் பயன்படுத்தும் வெள்ளைக்குச்சி அவர்களை ஒரு சுதந்திர மனிதராய் உலவ உதவுகிறது. 

பார்வைத் திறனற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக்குச்சி முதல் உலகப் போரிலிருந்து பர வலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பார்வைத்திறன் அற்றவரை அழைத்து நீங்கள், அவரிடம் அவரின் கையில் வெள்ளைக்குச்சியைக் கொடுத்து நடக்கச் செய்து அந்தக் கருவி கையில் இருந்தபோதும் இல்லாதபோதும் உள்ள வித்தியாசத்தை சொல்லச் சொன்னால், அவர்கள் அதன் அத்தியாவசியத் தேவையை நன்கு உணர்ந்து பேசுவார்கள். அது அவர்களுக்கு மிக மிகத் தேவையுள்ள மிகவும் மதிப்பு பெற்ற அற்புதமான உலகை அவர்களுக்கு மட்டும் காட்டுகிறது. தங்களின் பாதுகாப்பை உத்தர வாதம் செய்யும் ஓர் மந்திரக்கோல் என்றும் கூட கூறுவார்கள். அப்படி அருமையாய் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு சாதனம்.

வெள்ளைக்குச்சி கண்ணாடி இழைகளால்/கார்பன் இழை/உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த குச்சியை ஒரு கரத்தால் கையாள முடியும். இந்தக் குச்சியை பார்வைத் திறனற்றவர்கள் கையை வீசி நடக்கும்போது அந்த வெள்ளைக்குச்சியானது தனி ஊசல் போல் இரு பக்கமும் அலைபாயும். இதன் மூலம், அந்த சகோதரர்கள், சாலையில் எளிதாக யாரு டைய உதவியும் இன்றி நடக்க முடிகிறது. அவர்களின் தடத்தை அறிய, அதில் உள்ள பொருள்களை அறிய மேடு பள்ளம் கண்டறிய, மாடிப்படிகள் மற்றும் கதவு களையெல்லாம் அந்த குச்சி அவர்களின் ஆருயிர் நண்பனாய் அவர்களுக்கு வழி காட்டுகிறது. அந்தக் குச்சி, ஒருவருக்கு திறமையை அளிக்கி றது.  பிரச்சனைகளுக்கு தீர்வும், ஆளுமைத்தன்மை யையும் உருவாக்கித் தருகிறது. வெள்ளைக்குச்சி, பார்வையற்றவர்களின் சுதந்திரம் மற்றும் பெருமை/பெருமிதம் அதுவே. அதே சமயத்தில் வெள்ளைக் குச்சியை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் பார்வைத் திறன் அற்றவர் என்று நாம் எளிதாக அடை யாளம் காண முடியும்.

இதனை உருவாக்கியவர் ரிச்சர்டு ஹோவர் (Dr/Richard Hoover) என்பவர்தான். இதனால் பாரம்பரி யமாக இரு ஹோவரின் குச்சி என்றே அழைக்கப்படு கிறது. இது பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஜேம்ஸ் பிக்ஸ் என்ற நிழற்படக் கலைஞர் 1921ல் ஒரு விபத்துக்குப் பின் பார்வை இழந்துவிட்டார். அதன்பின் அவருக்கு கூட்டத்தில் நடப்பதும், வீட்டைச் சுற்றி வருவதும் மிகுந்த சிரமமாகிறது. அதனால் அவர் பயன்படுத்திய நடை குச்சிக்கு வண்ணம் தீட்டி வைத்திருந்தார் எளிதில் அடையாளம் காணும் பொருட்டு!

 உலகம் முழுவதும் வெள்ளைக்குச்சி

பிரான்சில், 1932 ல் குல்லி ஹேர்பேமொன்ட் (France. Guilly d‘Herbemont) தேசிய வெள்ளைக் குச்சி இயக்கம் என்ற ஒன்றினைத் துவங்கி, பார்வைத் திறனற்ற மக்களுக்கெல்லாம் வெள்ளைக்குச்சி அளித்தார். பின்னர் 1931, பிப்ரவரி 7 ல் இவரே பிரான்ஸ் அரசின் அமைச்சர்கள் முன்னிலையில் அடையாள மாக, இரண்டு வெள்ளைக் குச்சிகளை பார்வைத் திறனற்ற மனிதர்களுக்குக் கொடுத்தார். அதன் பின், முதல் உலகப் போரில் பார்வையைப் பறிகொடுத்த வர்களுக்கும். பார்வை திறனற்ற குடிமக்களுக்கும் என 5000 வெள்ளைக்குச்சிகள் வழங்கினார். பிறகு அமெ ரிக்கர்களும் அரிமா சங்கத்தின் மூலம் இதனை ஒரு இயக்கமாகச் செய்தனர். அதற்குப் பின்தான் 1964ல் இதனை உலக வெள்ளைக்குச்சி தினம் அக்டோபர் 15ம் நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்த குச்சியே ஐரோப்பாவில் அடியில் இரண்டு சிவப்பு பட்டை இருந்தால் அது கேட்கும் திறனற்றவர்களை யும் இணைத்துக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அக்டோபர் - 15 வெள்ளைக்குச்சி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது
 

;