articles

img

“நம்ம திட்டம் ட்ரைட்டயான் தான்” - கணேஷ்

“சார்... நாம எப்போ இஸ்ரோவுக்குப் போறோம்...” எப்போது ஆசிரியர் வருவார். இந்தக் கேள்வியைக் கேட்கலாம் என்று அந்த மாணவர் காத்திருந்தது போல தெரிந்தது.      மற்றொரு மாணவர் தொடர்ந்தார்..  “ஆமா சார்... நிறைய மாணவர்கள் சந்திர யான்-3 போறதப் பாத்துருக்காங்க..” குறுக்கிட்ட மற்றொரு மாணவர், “டி.வி.ல பாத்தாதான் நல்லது. மறுபடி, மறுபடி காட்டுவாங்க..” “நேர்ல பாக்குற மாதிரி வராது... என்ன சார்” என்று ஆசிரியரைத் துணைக்கு இழுத்தார். ஆசிரியரும், “ஒரு தடவையாவது நேர்ல பாக்கணும்” என்றபடியே, “இஸ்ரோனா என்ன” என்றார். அதற்குள் ஒரு மாணவர்,   “சார்.. Jailer ஆ, Jailor ஆ..” என்றார். மாணவர்கள் கிண்டல் பண்ணத் தொடங்கியதைக் கண்டுகொள்ளாத ஆசிரியர், “ரெண்டும் ஒண்ணுதான். நல்ல சந்தேகம்” என்று சொல்லி, “நம்ம கேள்விக்குப் போகலாமா?” என்றார். “இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்” என்று சொல்லிவிட்டு “அடுத்து என்ன கேப்பீங்கன்னு தெரியும்” என்ற வாறே “1969ல்ல ஆரம்பிச்சாங்க” என்றனர். “சரி.. அதென்ன அங்க போய்ப் பாக்கு றது பத்தியே பேசுறீங்க..

. உங்கள்ல யாராவது அங்க போய் திட்ட இயக்கு நரா, ஆய்வுக்கழகத்தோட தலைவரா ஆகணும்னு ஏன் யோசிக்க மாட்டேங்கு றீங்க..” பலரும் கைகளைத் தூக்கினார்கள். ஒரு மாணவரைப் பார்த்து மற்றொருவர், “சார்... இவன் இந்த வருஷம் ஸ்கூல் ஆரம்பிச்ச அன்னிக்கு கிரிக்கெட் வீரனா கனும்னு சொன்னான்... போன மாசம் செஸ்... இப்போ இஸ்ரோ விஞ்ஞானி..” ஆசிரியர் குறுக்கிட்டார்... “தப்பில்ல.. நம்ம வாழ்க்கைல நாம சந்திக்குற, கேள்விப்படுற சம்பவங்கள்தான் நம்ம உசுப்பி விடும். இதுல நமக்கும் எது நல்லா வருமோ, அது வேற லெவலுக்கு நம்மளக் கொண்டு போயிரும்..” “சரி... உங்கள்ல ஒருத்தர திட்ட இயக்குநராப் போடுறாங்க.. என்ன திட்டம் யோசிப்பீங்க..” “நெப்டியான் சார்...” என்றார் மாணவர். சிரிப்பொலிகள் எழ, ஒட்டுமொத்த வகுப்பும் அந்த மாணவரை நோக்கித் திரும்பியது. “அதென்ன, சந்திரயான், சமுத்திர யான், ககன்யான் மாதிரி புதுசா ஒண்ணு சொல்றியே..” “ஆமா சார்... நெப்டியூனை ஆய்வு செய்யுறதுதான் அந்தத் திட்டம்’ மற்ற மாணவர்கள் கைதட்டி ஆர்ப் பரித்தார்கள். “நெப்டியூன் பத்தி படிச்சுருக்கியா...” “கொஞ்சம் படிச்சுருக்கேன் சார்... சூரியக் குடும்பத்துல எட்டாவது கோள்.. இருக்குறதுலயே ரொம்பத் தூரம்..  வாயுக்கோளம்... நம்ம பூமிய விட 17 மடங்கு எடை சார்..” “சரி

... கடைசியா இருக்குற அதுல எதுக்கு ஆர்வம்... சனி, யுரேனஸ்னு யோசிக்கலாமே..” “சார்... நம்ம ஸ்கூல் முடிச்சு, டிகிரி படிச்சு, வேலை வாங்கி திட்ட இயக்குநரா குறதுக்கு முன்னாடி, இந்தத் திட்டம்லாம் முடிஞ்சுருச்சுனா...” “சரி... நெப்டியூன் திட்டத்துக்கும் யாராவது இயக்குநராகிட்டாங்கன்னா..??” “நீங்க கேப்பீங்கனு தெரியும் சார்... நம்ம அதிரடித்திட்டம் “ட்ரைட்டயான்” “அப்படியா.” என்ற ஆசிரியர் முகத்தில் திகைப்பு தெரிந்தது.  “ஆமா சார்... நெப்டியூனுக்கு ட்ரைட்டன்னு ஒரு நிலா இருக்கு... அங்க வறண்ட நிலம் இருக்கு... நைட்ரஜன் திரவ நிலைல இருக்குது.. வெந்நீர் ஊற்றுகள அங்க பாக்க முடியும்..” “இதெல்லாம் எங்க படிச்ச... வேற டீச்சர் யாரும் சொல்லிக் கொடுத்தாங் களா..” “இல்ல சார்... நெட்ல பாத்தேன். 1846, செப்டம்பர் 23 அன்னிக்குதான் முத முதல்ல நெப்டியூன தொலைநோக்கில பாத்தாங்க” பின்னால் சிலர் தங்களுக்குள் ஏதோ சொல்லிச் சிரித்தனர். “என்ன சிரிப்பு... சொல்லுங்க, நாங்களும் சிரிக்கு றோம்” என்றார். “சார்... ஸ்கூல்ல குரு...வீட்டுல கூகுள்..” மாணவர்கள் சிரிப்பில் ஆசிரியரும் கலந்து கொண்டார்.