articles

மாணவர்களை மகிழ்வுடன் வரவேற்போம்! - ஆர்.ராமானுஜம்

நவம்பர் 1, 2021 தமிழ்நாட்டில் மிக முக்கியமான நாள். 18 மாதங்களாக அடைந்து கிடந்த முதல் எட்டு வகுப்புகளுக்கான பள்ளி வகுப்ப றைகள் அன்று திறக்கின்றன. கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து சூரியக்கதிர்களையும்  தவழும் காற்றையும் வகுப்பறைக்குள் மட்டுமல்லாது நம் மனங்களிலும் வரவேற்கும் நற்தருணம் இது. மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் ஓவென்ற இரைச்சலுடன் பழகும் இசை மீண்டும் ஒலிக்கும் நேரம், குழந்தைகளும் ஆசிரியர்களும் மீண்டும் கலகலப்பு டனும் கண்டிப்புடனும் பழகும் தினசரி நாடகம் மீண்டும் நடப்பதற்கான திரைவிலகல். கொரோனா பெருந்த தொற்று நிலையில் அக்கறையுடனும் பாது காப்புடனும் செ யல்பட வேண்டும் என்று அனை த்துப்பள்ளிகளும் முனைப் புடன் இயங்குவர். இது தேவை தான். இருந்தும் அன்று மிகுந்த இடை வெளிக்குப் பின் பள்ளிக்கு வருவது 7 வயதிலிருந்து 13 வயதிற்குள்ளி ருக்கும் சிறு குழந்தைகள். “நான் பள்ளிக்கு செல்கிறேன்” என்று பெருமை யாகச்  சொல்ல ஒரு வருடமாய் வாய்ப்பில்லாது போன 6 வயதுக் குழந்தை கள். ஆர்வத்துடன் புது அனுபவம் காண காத்திருக்கும் 5 வயது சிறார்கள். பால்வாடி அங்கன்வாடிக்கு வரும் சிட்டுக்கள். ஆன்லை ன் வகுப்புகள் என்ற பெயரில் நடப்பதையெ ல்லாம் புரிந்தும் புரியாமலும் சகித்து இன்று பிற நண்பர்களை யும் ஆசிரியர்களையும் நேரில் சந்தித்து பழக ஆவலு டன் வரும் லட்சக்கணக்கான மாணவர்கள். பேரிடரின் கொடுமையில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களில் வேலை க்கு செ ன்று பொரு ளீட்டிய அனுபவத்துடன் மீண்டும் பள்ளி திரும்பும் பிஞ்சுகள். பள்ளியில் கிடைக்கும் மதிய உணவு மீண்டும் தினமும் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்புடன் பசித்து வரும் குழந்தைகள். வீட்டில் பல கொடுமைகளுக்கு உட்பட்டு பள்ளியில் பாதுகாப்பான இடம் கிடை க்கும் என்ற நம்பிக்கை யுடன் பள்ளி திரும்பும் பெண் குழந்தைகள்.

தமிழ்நாட்டில் 3-13 வயது குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி. ஒரே நாளில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் ஒரு சமூக செ யல்பாடு நிகழ்வதை நாம் “இது எதோ கல்வித் துறையின் வேலை” என்று விட்டுவிடக் கூடாது. நவம்பர் 1 தமிழ்நாடெ ங்கும் பெரியதொரு குழந்தைத் திருவிழாவாக மக்களின் முழு பங்கேற்புடன் கொண்டாடப்பட வே ண்டும். மேளதாளமும் புத்தாடையும் நம் மகிழ்வை வெளிப்படுத்தும் விதம் என்றால் அவை அந்நாளுக்கு மிகவும் பொருந்தியவை . ஒவ்வொரு பள்ளியும் வண்ணத்துடனும் இசையுடனும் பள்ளி வரும் குழந்தைகளை யும் ஆசிரியர்களையும் வரவேற்க வேண்டும். பெற்றோரை யும் தாத்தா பாட்டியினரையும் பள்ளிக்கு அழைக்கலாம். ஊர் தலை வர்கள் வரலாம். பிடிஓ, ஆர்டிஓ என அரசின் ஒவ்வொரு அலுவலரும் ஏதாவதொரு பள்ளி நோக்கி செ ல்லலாம். பேராசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் பள்ளி செ ல்லலாம். படித்தவர் ஒவ்வொருவரும் பள்ளி ஒன்றிற்கு செ ன்று மாணவரை ஊக்குவிக்கலாம். அரசியல் தலைவரோ சினிமா நடிகரோ வருகையில் வழி நெடுக நின்று வரவேற்கும் மக்கள் பள்ளி திரும்பும் மாணவர்களை வரவேற்க அணி திரண்டு ஆர்ப்பரித்து வர வேற்கலாம். தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் இது பற்றி பேசலாம். பள்ளியில் குழந்தைகளுடன் selfie எடுத்து பெருமை பேசிக் கொள்ளலாம். படித்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை இது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி ஒரு உரிமை மட்டுமல்ல, மகிழ்ச்சியான கல்வியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த வாய்ப்பு. நவம்பர் 1, 2021 மிக முக்கியமான நாள். மகிழ்வுடன் மாணவரை வரவேற்போம்.

;