articles

img

வனம் மற்றும் மலை மக்களுக்கு வாழும் உரிமை இல்லையா? - பெ.சண்முகம்

தமிழக ஆதிவாசி மக்களின் நம்பிக்கை நட்சத்தி ரமாக விளங்கும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 9ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் திருவள்ளூரில் நடைபெற இருக்கிறது. இந்திய நாடு சுதந்திரமடைந்ததின் பவள விழாவை நாடு உற்சாகமாக கொண்டாடும் வேளை யில் இம்மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆனபோ தும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட அரசியல் சாசனம் இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் அனை வருக்கும் சமமாகக் கிடைக்கப் பெறவில்லை. இதில் மிகவும் மோசமான நிலைமைக்கு உள்ளாக்கப் பட்டிருப்பவர்கள் ஆதிவாசி மக்கள் என்பதை அறுதி யிட்டுச் சொல்ல முடியும். இதை மேலும் மோசமாக்கி டும் வகையில் தான் ஒன்றிய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளன. அத்துடன் நீதிமன்றங்களும் இம்மக்களுக்கு எதிராக நெற்றிக்கண்ணைத் திறந்து தீயை உழிந்து கொண்டுள்ளன. இந்த மும்முனைத் தாக்குதலிலிருந்து மக்களை காக்கும் மகத்தான பணியினை தமிழக அளவில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், அகில இந்திய அளவில் ஆதி வாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பும் சிரமேற் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்பதை அம்மக்கள் நன்கறிவார்கள். 

வனஉரிமைச் சட்டம் 2006 நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இச்சட்டம் ஆதிவாசி மக்களுக்கும் வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூ கத்தினருக்கும் பொருந்தும். மலைவாழ் மக்கள் மட்டு மல்லாமல் 18 மாவட்டங்களில் வனநிலங்களில் விவ சாயிகள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி பழங்குடி யினர் எண்ணிக்கை 7,94,697 பேர். இவர்களில் பெரும் பகுதியானவர்கள் மலைகளில் தான் வாழ்கி றார்கள். பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய ஈரோடு மாவட்ட மலையாளி, புலையன் ஆகிய இனத்த வரும் மலைகளில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பளியர், மலசர், முதுவன் இன மக்களில் பலரும் இன்னமும் இனச்சான்றிதழ் கிடைக்கப் பெறாமல் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் அரசின் கணக்கெ டுப்புக்குள் வருகிறார்களா என்பது சந்தேகம் தான்.  இப்படிப்பட்ட நிலையில் வனஉரிமைச் சட்டப்படி உரிமை கோரி பெறப்பட்ட மனுக்களே சுமார் 40,000க் குள் தான். இவற்றில் சுமார் எட்டாயிரம் குடும்பங்க ளுக்கு மட்டும் தான் வனஉரிமைப் பட்டா வழங்கப் பட்டுள்ளது. பாதிக்கு மேற்பட்ட மனுக்கள் முறையான விசாரணை மேற்கொள்ளாமல் அதிகாரிகளால் தள்ளு படி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட விபரம் கூட மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இது தான் அதிமுக - திமுக  கட்சிகளின் ஆட்சிக் காலத்தி லும் சட்டம் அமலாக்கப்பட்ட லட்சணம். 

வன உரிமை சட்டத்திற்கு எதிரானது

அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி போட்டால் அடுத்த நாளே நாடு முழுவதும் அமல்படுத்தும் திறமை படைத்த ஆட்சியாளர்களால், ஆதிவாசி மக்களுக்காக உரு வாக்கப்பட்ட சட்டத்தை 15 ஆண்டுகள் ஆன பிறகும் அமல்படுத்தாமல் இருக்கிறார்கள் என்றால் அக்கறை யின்மை மற்றும் அலட்சியம் தானே காரணம். இச் சட்டத்தின் கீழ் பலன் பெற வேண்டிய மக்கள் அனை வரிடமும் மனுக்கள் பெறும் வேலையை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் முடிக்க அரசு முன்வர வேண்டும். இதற்கென்று சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை சம்பந்தப் பட்ட ஊராட்சிகளில் நடத்திட வேண்டும். சட்டம் குறித்து அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும். இச்சட்டத் தின் பலன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க எவ்வ ளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால்,

இச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் ஒன்றிய அரசும் நீதிமன்றங்களும் ஈடுபட்டுள்ளன என்பதை கவனப்படுத்துகிறோம்.  ஒன்றிய அரசு, சமீபத்தில் வனப்பாதுகாப்புச் சட்டம் 1980இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள் ளது. இதில் முக்கியமானது, கிராம சபையின் ஒப்பு தலை பெற வேண்டிய அவசியமில்லை என்பது வன உரிமைச் சட்டத்தின் மையமான அம்சத்தை காலி செய்வது ஆகும். உச்சநீதிமன்றம் ஜுன் 3ஆம் தேதி  வெளியிட்ட உத்தரவில் வனவிலங்கு சரணாலயங்க ளின் வெளிவட்டப்பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்ற ளவுக்கு விஸ்தரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளது. இதனால், ஆதிவாசி மக்களும், மற்றவர்களும் பட்டா வைத்திருந்தாலும் வெளியேற்றப்படுவார்கள் . இது வனஉரிமைச் சட்டத்திற்கு எதிரானது. ஆனால் மத்தியச் சட்டத்தை  ஏன் அமலாக்கவில்லை என்பதை கேட்பதற்குக் கூட ஒன்றிய பாஜக அரசு தயாராக இல்லை. அதனால் தான், வேறு எந்த சட்டத்தையும் விட கிடப்பிலே போடப்பட்ட ஒரு சட்டமாக இச்சட்டம் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. பிற்படுத் தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் காட்டும் அக்கறையில் கடுகளவு கூட ஆதிவாசி மக்க ளுக்கான சட்டத்தை அமல்படுத்துவதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை மறுக்க முடியாது. 

வாழும் உரிமை இல்லையா?

சமவெளிப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் முக்கியப் பிரச்சனை வீடில்லாததும், வேலையின்மை யும் தான். பெரும்பாலான குடும்பங்கள் நீர்நிலைப் புறம்போக்குகளிலும், அரசின் பல்வேறு வகையான புறம்போக்குகளிலும் தான் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலைப்புறம்போக்குகளில் வசிக்கும் மக்களை யெல்லாம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டு மென்று மிகக் கறாரான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகள் காட்டும் கடுமை பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்ப் படிய வேண்டிய நிலையில் உள்ள அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தை கூடவே கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.  நீதிமன்றத்திற்கு நமது கேள்வி: “இம்மக்களுக்கு வாழும் உரிமை இருக்கிறதா? இல்லையா? வாழும்  உரிமை இருக்கிறதென்றால், அதற்கான ஒரு வீடு வேண்டும் தானே! திடீரென்று காலி செய்தால் அவர்கள் எங்கு செல்வார்கள்? மாற்று இடமும் அரசு வழங் கக்கூடாது என்று தடைவிதிக்கிறீர்கள். நடு வீதியில் நாக ரிகமாக வாழ முடியுமா? நீர்நிலையைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறையில் எள் முனையளவாவது மக்கள்  வாழ்வதற்கு வழிகாட்டுகிறீர்களா? இவர்கள் ஒன்றும் சாஸ்திரா நிறுவனத்தைப் போல் ஏக்கர் கணக்கில் வளைத்து மாளிகை கட்டி வாழவில்லையே. ஒரு சென்ட், அரை சென்ட் இடத்தில் ஒரு குடும்பமே வகிக்கிறது. இதில் காட்டும் அவசரத்தை ஏன் சாஸ்திரா போன்ற பெரிய நிறுவனங்களிடத்தில் காட்டுவதில்லை? அவர் களிடம் காட்டும் பெருந்தன்மையை ஏழை, எளிய மக்க ளிடம், கருணையாகக் கூட காட்ட மறுக்குறீர்கள்.

மக்களின் குடியுரிமையைப் பாதுகாப்பது மக்கள் மீது அக்கறையுள்ளவர்களின் கடமை. அதைத்தான் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போன்ற அமைப்பு கள் செய்து வருகின்றன. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வினை ஏற்படுத்துவது அரசின் தலையாய கடமை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். நீதிமன்றங்கள் தங்க ளது உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அல்லது அரசு வகை மாற்றம் செய்து முறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடுக்க வேண்டும். 

வனத்துக்குள் வசிப்பவர்களுக்கும் சான்று வழங்க மறுப்பதேன்?

பழங்குடியினர் இனச்சான்றிதழ் பெறுவதில் இன்ன மும் இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். வேறு எந்தச் சான்றிதழ் பெறுவதற்கும் மக்கள் இவ்வளவு சிரமத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள். ஒருவர் பழங்குடியினத்தவரா இல்லையா என்பதை அறிவ தற்கு ஏராளமான மானிடவியல் தரவுகள் உள்ளன. ஏது மற்ற மக்களிடம் ஆதாரங்களை கேட்பதன் நோக்கமே தாமதப்படுத்துவது, அலையவிடுவது, பிறகு பணம் பறிப்பதற்கு அவர்களின் அவசியத்தை பயன்படுத் திக் கொள்வது என்ற முறையில் தான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பெரு நகரங்களில் வசிப்பவர்களை கண்ட றிவதில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால், வனத்திற் குள், வனத்தைச் சார்ந்து வாழும் பளியர் இன பழங்கு டியினத்தவர்களுக்கு ஏன் அதிகாரிகள் சான்றிதழ் தராமல் இருக்கிறார்கள் என்பதற்கு என்ன விளக்கத்தை அரசு தரும்?

மற்றொன்று, அதிகாரிகள் கொடுத்த சான்றிதழை, அது மெய்த்தன்மையுடையது தானா என்று அதிகாரி களே சரிபார்க்கிறார்கள்? இதற்கான விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள். சான்றிதழ் பெற்றது கிரிமினல் குற்றம் என்று அரசு கருதுகிறதா? அது போலியானது என்று இறுதியான முடிவுக்கு வந்த பிறகு காவல்துறை மூலம் கைது செய்து வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத்தருவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. சான்றிதழ் மெய்த் தன்மை அறிவதற்கு என்று சில வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதற்கு மாறாக, தமிழ்நாடு அரசு, கொண்டாரெட்டி பழங்குடியினருக்கு கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட அனைத்து சான்றி தழ்களையும் சரிபார்ப்பது என்ற பெயரில் அதிகாரிகள் குழுவை ஏற்படுத்தி கிராமங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொள்வது எந்த விதிமுறையின் அடிப்படையில் என்பதை அரசு விளக்குமா?

முதல்வரிடம் முறையிட்டும்...

மூன்றாவது நபர்கள் கொடுக்கும் ஆதாரமற்ற புகாரை ஏற்று விசாரணை என்று ஆரம்பித்தால் அதற்கு ஏதாவது எல்லையுண்டா? ஆதிதிராவிடர் - பழங்குடி யினர் நலத்துறை செயலாளரின் விசாரணை தொடர் பான இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்பதை முதலமைச்சரிடம் நேரில் தெரிவித்த பிறகும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென்றால், அதி காரிகளின்  தவறான நடவடிக்கைகளை அரசு ஆத ரிக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. கொண்டா ரெட்டி இனம் தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகா ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து தமிழகத்து டன் இணைக்கப்பட்டதால் இவ்வின மக்கள் இத்த கைய துயரங்களுக்கு உள்ளாக வேண்டுமா? எனவே,  ஏற்கனவே, இருந்த செயலாளர் போட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், விசாரணை என்ற பெயரில் நடக்கும் சித்ரவதைகளை நிறுத்துவதற்கு அரசு முன்வரவேண்டும். 

அரசுத் துறைகளில், ஒன்றிய அரசு நிறுவனங்களில் 7.5 சதவீதமும், மாநில அரசு துறைகளில் 1 சதவீதமும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்த வேண்டும். ஆனால், இந்த சதவீத  அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படவில்லை. ஆயி ரக்கணக்கான காலிப்பணியிடங்கள் ஆண்டுக்கணக் கில் காலியாக வைக்கப்பட்டிருக்கிறது. இது அம்மக்க ளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.  ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் கருத்துகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக இருந் தால் திருடனாகத்தான் இருப்பார், குற்றம் செய்தி ருப்பார் என்ற மனப் போக்கு மாற வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இம்மக்களுக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்ட வேண்டும். 

இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் விவாதிக்க, மக்க ளின் வாழ்வில் மாற்றம் முன்னேற்றம் கண்டிட திரு வள்ளூரில் நடைபெறுகிறது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு. தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் இணைப்பு அமைப்பாக செயல்பட்டு வரும் இச்சங்கம் மலைமுகடுகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து பழங்குடி மக்களை யும் ஒன்றிணைத்து செயல்படும் அமைப்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். எத்தனையோ சாதனை களை நிகழ்த்தியுள்ள இவ்வமைப்பின் மாநாடு திரு வள்ளூரில் திருப்புமுனையை ஏற்படுத்திட கூடுகிறது. பூர்வகுடிகளின் முன்னேற்றத்திற்கு அரசும், மற்ற சமூகத்தினரும் கரம் கோர்த்துச் செயல்படுவோம்.  

கட்டுரையாளர் : மாநிலத் துணைத்தலைவர், 
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்


 

 

;