articles

img

அமெரிக்க ஜனநாயகம் யாருக்கானது? - ஆனந்தன்,தூத்துக்குடி

உலகின் எல்லா நாடுகளுக்கும் ஜன நாயகம் பற்றி போதிக்க தனக்கே அதி காரம் இருப்பது போல் அமெரிக்கா நடந்து கொள்ளும். ஆனால், அந்த நாட்டில் ஜனநாய கம், இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி உள்ளுக்குள் வெடித்ததை, உலகம் பார்த்தது. அமெரிக்காவில் ஜனநாயகம் பாதுகாப்பாக இல்லை என்பதை அந்த நாட்டு அரசியல் வல்லுனர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு ஜனநாயகம் மிகவும் ஆபத்திற்குள்ளாகியிருப்பதற்கு அந்த ஜன நாயகம், லிங்கனின் வார்த்தைகளைப் போல் “மக்க ளால் மக்களுக்கான ஆட்சியாக” இல்லாமல் கார்ப்ப ரேட் ஜனநாயகமாக மாறியதால்தான் தற்போது அது ஐசியு நோயாளியாகிவிட்டது. 

திண்டாடும் பைடன்

அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வாக்கு கள் பெற்று வெற்றி பெற்ற ஜோ பைடனோ தனது தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். காரணம், அமெரிக்காவின் பலம் பொருந்திய கார்ப்பரேட்டுகள்.  அமெரிக்கச் சட்டங்களின்படி அதிபருக்கு எல்லா அதிகாரமும் இருந்தாலும், அவர் நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புத லுக்கு உட்பட்டவை. அவர் நியமிக்கும் மந்திரியிலி ருந்து(செகரட்டரி), அவரது செலவு பட்ஜெட் வரை அனைத்தும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டும். ஒரு வகையில் தனிநபர் அதிகாரத்திற்கு எதிராக சமன் செய்யும் ஏற்பாடாக இந்த முறை உள்ளது.  ஆனால், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பி னர்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக செயல்படுகிறார்கள் என்பதை அங்கு நாடாளு மன்றத்தில் அரங்கேறும் நாடகங்கள் தற்போது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. 

தற்போது பைடன் நிர்வாகம் கிட்டத்தட்ட தரைதட்டி  நிற்கிறது. அமெரிக்க அரசு, வாங்கிய கடனுக்கு தவணை கட்டத் தவறிவிடும் நிலையில் தற்போது நிற்கிறது. இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடை பெற்றதேயில்லை! ஏன் இந்த நிலை? காரணம் பைடன் நிர்வாகத்தின் 3.4 டிரில்லியன் (டிரில்லியன்= 1 லட்சம் கோடி) டாலர் பில்ட் பேக் பெட்டர்(Ouild Oack Oetter -ããã) பிளான் என்னும் திட்டம்.  இந்த முறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில், சாதாரண மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டுவந்ததில், ஓர் இடது மாற்றை தேர்த லில் மையமான அரசியல் பிரச்சனையாக மாற்றியதில், செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி யின் முற்போக்குப் பிரிவினர் மிக முக்கியப் பங்காற்றி னர். முதலில் பைடன் இதற்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார். பின்னர் அவரே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என ஆகிய போது, அவர் இந்த இடது மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி யளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் கொண்டு வந்த திட்டம்தான் பில்ட் பேக் பெட்டர் (மீண்டும் சிறப்பாக கட்டுவோம்) என்ற இந்த மசோதா. 

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக  கமலா ஹாரிஸ்

இந்த மசோதா காங்கிரசில் நிறைவேறுவதில் சிரம மில்லை. காரணம் அங்கு ஜனநாயக கட்சிக்கு பெரும் பான்மை உள்ளது. ஆனால், செனட்டில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் சரிசமமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். இருவருக்கும் தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர். அரசு ஒரு மசோதாவை செனட்டில் நிறைவேற்ற வேண்டுமெனில், அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பதிவான வாக்குகள் சரிசமமாக இருக்கும் நிலை யில், குடியரசு துணைத்தலைவர் கமலா ஹாரிஸ் தனது வாக்கை அரசுக்கு ஆதரவாகப் போடலாம்.  அப்படியெனில் இந்த திட்டத்தை துணை ஜனாதி பதி வாக்குடன் நிறைவேற்றிவிட வேண்டியதுதானே என நீங்கள் கேட்பது புரிகிறது. அங்குதான் வருகிறது திருப்பம். ஜனநாயக கட்சியின் மேற்கு வெர்ஜீனியா வின் ஜோ மேன்சின், அரிசோனாவின் கிரீஸ்டன் சின்ன மா ஆகிய இரண்டு பேரும் இந்த 3.4 டிரில்லியன் டாலர் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர முடியாது என்கின்றனர்.(அங்கு கட்சி நிலைக்கு எதிராக வாக்களித்தால் பதவி பறி போகாது).  அவர்கள் இருவரும் எதற்காக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை சொல்ல மறுக்கிறார்கள். பொதுவாக இது மிக அதிக தொகை, இவ்வளவு அதிகம் செலவழித்தால், பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொத்தாம் பொதுவாக தெரிவிக்கிறார்களே தவிர குறிப்பிட்டு எதையும் புள்ளிவிவரத்தோடு சொல்வ தில்லை. 

அவர்கள் இருவரும் கார்ப்பரேட் நலனை மனதில் கொண்டு இந்த திட்டத்தை எதிர்ப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்சி தேர்தல் நிதிக்கு அவர்கள் படிவ எரிபொருள் உட்பட பிரம்மாண்ட கார்ப்பரேட்களிடமிருந்து பல மில்லியன் டாலர்கள் நிதி பெற்றவர்கள்.  அவர்கள் இருவரும், தங்களின் கார்ப்ப ரேட் ஆதரவு நிலையில் உறுதியாக உள்ளனர்.  அவர்கள் எதிர்த்து வாக்களித்தால், அரசு கொண்டு வந்த நிதிமசோதா தோல்வியாகிவிடும் என்பதால், இந்த மசோதாவை வாக்கெடுப்பிற்கு விடாமல் சபாநாய கர் நான்சி பெலோசி தடுத்து விட்டார்.  இவ்வளவு கடும் எதிர்ப்பை செனட்டில் எழுப்பி யுள்ள நாட்டின் கவுரவத்தையே கேள்விக் குறியாக்கும் இந்த 3.4 டிரில்லியன் டாலர் பில்ட் பேக் பெட்டர் திட்டம் தான் என்ன?

குழந்தைகளுக்கு மானியம்

உலகின் மிகவும் பணக்கார நாடான அமெரிக்கா வில் வறுமையில் உழல்வோர் அதிகம். அதிலும், கடும் வறுமையில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் மிக அதிகம். குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பல ஆரோக்கி யக் கேடுகளுக்கு உள்ளாகின்றன. முன்னேறிய பொருளாதாரங்களில் ஒரு குழந் தையை ஆரோக்கியமாக வளர்க்க அரசு 14000 டாலர் செலவிடுவதாகவும், அமெரிக்கா இதில் 28இல் 1 பங்காக 500 டாலர் மட்டுமே செலவழிப்பதாகவும், அதைச் சரிசெய்யவே பிபிபி என அமெரிக்க ஜனாதிபதியே தனது டுவிட்டரில் பதிவிடுகிறார்.  பிபிபி திட்டத்தின்படி உதவித் தொகையாக 6 வயதுக்குட் பட்ட குழந்தைக்கு மாதத்திற்கு 300 டாலர், 6-17 வயது குழந்தைகளுக்கு மாதம் 250 டாலர் வழங்கப்படும்.

மருத்துவ மற்றும் குடும்ப விடுப்பு

அமெரிக்காவில் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு கிடையாது. அதே போன்று பெருந்தொற்று போன்ற பேரிடர் காலங்களில் குடும்பத்தினர் பாதிக்கப் பட்டால் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியாது. பிபிபி திட்டப்படி வருடத்திற்கு 12 வாரம்(3 மாதம்) விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்திற்கு இழப்பீடாக மாதம் 4000 டாலர் தரப்படும்.  வேலை பார்க்கும் குடும்பங்களில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள(நமது பால்வாடி போல) சைல்ட் கேர் அமைப்புகள் உள்ளன. அவற்றில் மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றின் கட்டணம் குறைக்கப்படும். 3, 4 வயது குழந்தைகளுக்கு இலவச பள்ளிகள் நடத்தப்படும். அமெரிக்காவில் கல்லூரிக் கல்வி மிக மிக அதிகக் கட்டணங்களைக் கொண்டது. அங்கு அரசு மானி யங்கள் மூலம், கல்விக் கட்டணங்களைக் குறைக்க இந்த மசோதா வழிகோலும். குறிப்பாக கருப்பின, பழங்குடி மாணவர்கள் படிக்கும் பல்கலைக் கழகங்களில். ஒபாமா மெடிக்கல் திட்டம் என அழைக்கப்படும் அபோர்டபிள் கேர் ஆக்ட் என்ற சட்டம் 2024 வரை அமெரிக்க அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 100 சதமானம் பேர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.  அமெரிக்காவில் பல மருந்துகள் விலை உலகில் வேறெங்கும் விற்பதை விட பல மடங்கு அதிகமாகும். பிபிபி நடைமுறைக்கு வந்தால், மருத்துவர் பரிந்து ரைக்கும் மருந்துகளின் விலை 55 சதவீதம் குறைக்கப் படும், அதன் பண மதிப்பு 450 பில்லியன் (பில்லி யன் = 100 கோடி)  டாலர்.

உச்சபணக்காரர்களின் வரிச் சலுகை குறைக்கப்படும்  

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே இந்தத் திட்டத் திற்கான நிதி, மோடி அரசு போல சாமானிய மக்கள் மீது வரி விதிக்கவில்லை. மாறாக, 2017இல் டிரம்ப் அரசு நாட்டின் உச்சபட்ச செல்வந்தர்களுக்கும், கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கும் அளித்த வரியில்லா சலுகை யைத் திருத்தி, அவர்களுக்கு குறைந்தபட்ச வரி விதிக்கப்படும்.  2017 சட்டத்தின் காரணமாக, அமெரிக்காவின் உச்ச பட்ச பணக்காரர்களில் முதல் 82 பேர்கள், 1 பில்லியன் டாலர் வரை வரிவிதிக்காததால் லாபம் அடைந்துள்ள னர். இவர்கள் வரிச் சலுகையால் அமெரிக்காவின் கடன், 2.3 டிரில்லியன் டாலர் அதிகரித்தது(தகவல்: இன்ஈக்வாலிட்டி இணையதளம்).  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அல்ட்ரா பணக்கா ரர்களுக்கு(பில் கேட்ஸ், ஜெப் பேசோஸ் போன்ற வர்களுக்கு) வரிவிதிப்பது என்பதே குடியரசு கட்சியி னருக்கும், ஜோ மான்சின், கிரீஸ்டன்சின்னமா போன்ற வர்களுக்கு கோபத்தைக் கிளறுகிறது.

75 விழுக்காடு மக்கள் ஆதரவு 

பல கருத்துக் கணிப்புகள் அமெரிக்க மக்களில் 75 விழுக்காடு இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர் என்கின்றன. மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவலை யில்லாமல் அதற்கு எதிராக நிற்கிறார்கள்.  இந்த மசோதாவிற்கு எதிராக ஆதரவு திரட்ட ஒரு உறுப்பினருக்கு 3 பேர்வீதம் 500 லாபியிஸ்டுகளையும், 171 மில்லியன் டாலர் அளவிற்கு பணத்தையும் மருந்து உற்பத்தியாளர்கள் இறக்கிவிட்டுள்ளதாகவும், அமெ ரிக்காவின் முன்னணி 20 நிறுவனங்கள் 201 மில்லியன் டாலர் அளவிற்கு நிதியை செலவழிப்பதாகவும் இன்ஈக்வாலிட்டி இணையதளம் தெரிவிக்கிறது. பிபிபி மசோதாவை நிறைவேறவில்லை என்றால், ஜனநாயக கட்சியின் முற்போக்கு அணியினர் கடன்க ளை திருப்பிச் செலுத்தும் மானியக் கோரிக்கையை எதிர்த்து வாக்களிப்போம் என்று கறாராக அறிவித்து விட்டனர்.  அமெரிக்க ஆளும் வர்க்கம் சிறு சமரசங்களுக்கு உட்படுத்த சிலர் முயல்கின்றனர். அவர்கள் முயற்சி வெற்றி தருமா, அந்த ஜனநாயகம் மக்களுக்கானது தானா என்பதை உலகமே பார்த்துக் கொண்டி ருக்கிறது! 



 

 

;