எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் பாஜக அரசின் அமலாக்கத்துறை (ED), ஊழலின் ஊற்றுக்கண்ணான பாஜகவை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்?
1
2019-இல் எடியூரப்பாவிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவ ணங்களில் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக மத்திய அலுவலக கணக்கு என பலருடன் 1800 கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்ப ட்டிருந்ததே, எடியூரப்பாவை அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
2
குஜராத்தில் மோடி ஆட்சியில் ரூ.750 கோடி ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் விபுல் சௌத்ரி-யை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
3
பல கோடி டெண்டர் ஊழல் வழக்கில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் நேரு ஓலேகரை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
4
40 பேர் பலி மற்றும் பல கோடி ஊழல் நடைபெற்ற மத்தியப் பிரதேச வியாபம் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மாவை 2019-ல் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. பின்பு கொரோனாவால் மரணமடைந்தார். முறைகேடு நடந்ததை நாடே அறியும். இந்த பணபரிமாற்றத்தை அமலாக்கப்பிரிவு விசாரிக்காதது ஏன்?
5
எடியூரப்பா கொரோனா நேரத்தில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் செய்துள் ளதாக பாஜக எம். எல்.ஏ. பாசனகவுடா குற்றஞ்சாட்டி னாரே, அதை அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி, அவரை கைது செய்யாதது ஏன்?
6
2001-ல் பாதுகாப்பு துறை தளவாடங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய பாஜக தலைவர் பங்காரு லட்சுமணனை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
7
பெங்களூரு மெகாசிட்டி ஊழலில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஷ்வரை ரெய்டு நடத்தி அவரை கைது செய்யாதது ஏன்?
8
மோடி அமைச்சரவையில், குஜராத்தில் ரூ.400 கோடி மீன்வள ஒப்பந்த ஊழல் வழக்கில் ஈடுபட்ட அமைச்சர்கள் பர்ஷோத்தம் சோலங்கி & திலீப் சங்கனியை ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்யாதது ஏன்?
9
ரூ.103 கோடி வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிரா பாஜக தலைவர் மோகித் கம்போஜ்ஜை ரெய்டு நடத்தி அவரை கைது செய்யாதது ஏன்?
10
ரூ.18 கோடி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கர்நாடக பாஜக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டியை ரெய்டு நடத்தி அவரை கைது செய்யாதது ஏன்?
11
ரூ.2438 கோடி ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் ஹரீஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
12
ரூ.5000 கோடி நியோ மேக்ஸ் நிதி மோசடியில் ஈடுபட்ட மதுரை பாஜக பிரமுகர் வீர சக்தியை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
13
விக்ராந்த் போர்க் கப்பல் பெயரில் ரூ.57 கோடி பண மோசடியில் ஈடுபட்ட மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரித் சோமயா-வை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
14
வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரவை யில் மத்திய அமைச்சராக இருந்த திலீப் ரேய், ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் பல கோடி மோசடியில் ஈடுபட்டாரே -அம லாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி அவரை கைது செய்யாதது ஏன்?
15
1 கி.மீ. சாலை அமைக்க ரூ.250 கோடி; சுங்கச்சாவடி ஊழல் - ரூ.137 கோடி; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.22.44 கோடி ஊழல் - இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் களை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
16
மத்திய உள்துறை அமைச்சகம் ஊழலில் முதலிடம் பிடித்துள் ளதே. இதில் மத்திய அமைச்ச ருக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை ரெய்டு நடத்தி விசாரிக்காதது ஏன்?
17
ரூ. 526 கோடிக்கு வாங்க இருந்த ரபேல் விமானத்தை மோடி அரசு ரூ. 1,670 கோடிக்கு வாங்கியதே - இதில் முறை கேட்டில் ஈடுபட்ட பாஜக அமைச்சர் களை அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி விசாரிக்காதது ஏன்?
18
ரூ.1.37 கோடி ஊழல் வழக்கில் ஈடுபட்ட மிசோரம் பாஜக எம்.எல்.ஏ. புத்ததான் சக்மா-வை ரெய்டு நடத்தி கைது செய்யாதது ஏன்?
எதிர்க்கட்சி முதலமைச்சர்களான ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரையும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய முகமைகளை ஏவி சோதனைக்குள்ளாக்கி சிறையில் அடைத்துள்ளது மோடி அரசு. ஆனால் பாஜகவில் உள்ள ஊழல் பேர்வழிகளையும் பாஜகவில் இணைந்து கொண்ட ஊழல் பேர்வழி களையும் அரிச்சந்திரன்கள் போல நடத்துகிறது மோடி அரசு.
நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் பாஜகவுக்கு மரண அடி கொடுப்போம்!