articles

img

சமூக நீதி காக்க சபதமேற்போம்! - ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியாவின் கூட்டாட்சி முறையை மாற்றுவது என்பது பாஜக ஒற்றை இந்துராஷ்டிரத்தை கட்டமைப்பதற்கு அடிப்படையாக உள்ளது. அதே சமயம் இந்தியாவின் கூட்டாட்சி முறையை தகர்ப்பது கார்ப்பரேட்களுக்கு மிகப்பெரும் அனுகூலமாக அமைகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்து டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையில், “ஜனவரி 26, 1950 ல், நாம் ஒரு முரண்பாட்டிற்குள் நுழைகிறோம். அரசியல் தளத்தில் சமத்துவமும், சமூகப் பொருளாதாரத் தளத்தில் சமத்துவமின்மையும் நிலவும். அரசியல் தளத்தில் ஒரு மனிதன் ஒரு வாக்கு, ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், சமூகப் பொருளாதார தளத்தில், சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் தொடரப்போவதால், ஒரு மனிதன் ஒரு மதிப்பு (மனிதர்கள் அனைவரும் சமம்) என்ற நிலையை நாம் தொடர்ந்து மறுத்து வருவோம். இப்படி, சமூகப் பொருளாதாரத் தளத்தில் சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து கொண்டே சென்றால், நாம் உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தையும் இழக்க நேரிடும்” என எச்சரித்தார். சமூக பொருளாதாரத்தில் சமத்துவத்தை அடைவதே சமூகநீதி. இந்த 75 ஆண்டுகளில் சமூக, பொருளாதார தளத்தில் நாம் சமத்துவம் அடையவில்லை என்பதோடு, மோடியின் பாஜக ஆட்சியில் சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடைந்து வருகிறது என்பதே உண்மை.  இந்திய உழைக்கும் மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி, ஆர்.எஸ்.எஸ்-சின் செயல்திட்டமான இந்துராஷ்டிரத்தைக் கட்டமைக்கும் வேலையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆம் பிரிவு  நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைக் கொண்டுவந்து, இந்தியாவின் குடிமக்களாக பல நூற்றாண்டுகாலம் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சியை மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட குடிமக்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், பாஜகவின் இத்தகைய இஸ்லாமிய வெறுப்பரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.  

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்து டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையில், “ஜனவரி 26, 1950 ல், நாம் ஒரு முரண்பாட்டிற்குள் நுழைகிறோம். அரசியல் தளத்தில் சமத்துவமும், சமூகப் பொருளாதாரத் தளத்தில் சமத்துவமின்மையும் நிலவும். அரசியல் தளத்தில் ஒரு மனிதன் ஒரு வாக்கு, ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், சமூகப் பொருளாதார தளத்தில், சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் தொடரப்போவதால், ஒரு மனிதன் ஒரு மதிப்பு (மனிதர்கள் அனைவரும் சமம்) என்ற நிலையை நாம் தொடர்ந்து மறுத்து வருவோம். இப்படி, சமூகப் பொருளாதாரத் தளத்தில் சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து கொண்டே சென்றால், நாம் உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தையும் இழக்க நேரிடும்” என எச்சரித்தார். சமூக பொருளாதாரத்தில் சமத்துவத்தை அடைவதே சமூகநீதி. இந்த 75 ஆண்டுகளில் சமூக, பொருளாதார தளத்தில் நாம் சமத்துவம் அடையவில்லை என்பதோடு, மோடியின் பாஜக ஆட்சியில் சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடைந்து வருகிறது என்பதே உண்மை.  இந்திய உழைக்கும் மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி, ஆர்.எஸ்.எஸ்-சின் செயல்திட்டமான இந்துராஷ்டிரத்தைக் கட்டமைக்கும் வேலையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆம் பிரிவு  நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைக் கொண்டுவந்து, இந்தியாவின் குடிமக்களாக பல நூற்றாண்டுகாலம் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சியை மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட குடிமக்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், பாஜகவின் இத்தகைய இஸ்லாமிய வெறுப்பரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.  

ஒரு பக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பரசியலை முன்னிறுத்தி, மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி வரும் பாஜக, மறுபுறம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்கள் இந்தியாவின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து, இந்தியாவின் உழைக்கும் மக்களை உறிஞ்சி, உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதன்மைப்படுத்துவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது.  பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள், நவீன தாராளமயத்தை வேகப்படுத்தும் வகையில் இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும், பாஜக கடந்த 8 ஆண்டு காலத்தில் பாய்ச்சல் வேகத்தில் தனியார்மயம், தாராளமயமக் கொள்கைகளை  அமலாக்கி வருவதைப் பார்க்கிறோம். ராணுவத் தளவாட உற்பத்தி, ரயில்வே, இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய பொதுத்துறை சொத்துகளை எல்லாம் கார்ப்பரேட்களுக்கு விற்று அவர்கள் லாபம் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.  ‘ரூ.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட வாய்ப்புள்ளது’ எனக் கணித்துச் சொன்ன ஒன்றிய அரசு, சமீபத்தில் வெறும் ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றையை ஏலம்விட்டு, நாட்டுக்கு மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்சின் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்ப்பதற்காக இந்த ஏற்பாட்டை பாஜக செய்து கொடுத்துள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. 

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை அழித்து ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாஜக துணை போகிறது. இதை மறைப்பதற்காக, “பி.எஸ்.என்.எல்-ஐ காப்பாற்ற நாங்கள் ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம்!” என நாடகமாடி, “பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்  ஒன்று செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் அழிந்துபோக வேண்டும்” (‘Perform or Perish!’) என ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மிரட்டல் விடுக்கிறார். “பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி தொழில்நுட்பத்தில் இருந்து 4ஜி தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்காக, 2019 பிப்ரவரியில் ரூ.23,814 கோடி, 2022 பிப்ரவரியில் 44,000 கோடி, தற்போதைய அறிவிப்பான ரூ.1.64 லட்சம் கோடியில், ரூ.44,993 கோடிகள் - என மொத்தம் ரூ.1,12,807 கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளோம்’ என ஒன்றிய அரசு ஒரு புறம் விளம்பரம் செய்கிறது. ஆனால், உண்மையில் 3ஜி யில் இருந்து 4ஜி தொழில்நுட்பத்திற்கு பி.எஸ்.என்.எல் மாறுவதற்குச் செய்யவேண்டிய மென்பொருள்  மேம்படுத்தலைக்கூட அது செய்யவிடாமல், அதற்கான அனுமதியை ஒன்றிய அரசாங்கம்  பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மறுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 4ஜி BTS கருவிகளை  பி.எஸ்.என்.எல் நிறுவனம் வாங்குவதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து 4ஜி தொழில்நுட்பத்திற்கு பி.எஸ்.என்.எல் செல்லாமல் இருக்க அனைத்து வகையான முட்டுக்கட்டை ஏற்பாடுகளையும் பாஜக செய்து வருகிறது. கார்ப்பரேட்கள் கொள்ளை லாபம் பார்ப்பதற்காக எந்தளவுக்கு நாட்டின் வளங்களை பாஜக தாரை  வார்க்கிறது என்பதற்கு பி.எஸ்.என்.எல் ஒரு உதாரணம் மட்டுமே. மூன்று வேளான் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயச் சந்தையையும் கார்ப்பரேட்களுக்கு திறந்துவிட மோடி அரசாங்கம் முயன்றது; அதை எதிர்த்து இந்திய விவசாயிகள் கிளர்ந்தெழுந்து, உலகின் நீண்ட காலப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்; அந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.   

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்தியாவின் ஆட்சி அமைப்பு கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றிய அரசுக்கான அதிகாரப் பட்டியல், மாநில அரசுகளுக்கான அதிகாரப் பட்டியல், இரண்டு அரசாங்கங்களுக்கும் பொதுவான அதிகாரப் பட்டியல் என்ற அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரப் பிரிவினையை வரையறுத்துள்ளது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், கல்வி அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் உட்பட மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே வரிவிதிப்பு முறை, ஒரே கல்வி முறை, ஒரே ரேஷன் கார்டு, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என இந்தியாவை ஒன்றியம் என்ற நிலையில் இருந்து ஒற்றையாட்சி (Unitary) அரசாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் அனைத்தும் கொண்டுவரப்படுகின்றன.  இந்தியாவின் கூட்டாட்சி முறையை மாற்றுவது என்பது பாஜக ஒற்றை இந்துராஷ்டிரத்தை கட்டமைப்பதற்கு அடிப்படையாக உள்ளது. அதே சமயம் இந்தியாவின் கூட்டாட்சி முறையை தகர்ப்பது கார்ப்பரேட்களுக்கு மிகப்பெரும் அனுகூலமாக அமைகிறது.  130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பரந்துபட்ட பெரிய சந்தை கார்ப்பரேட்களுக்குத் தேவைப்படுகிறது. மாநிலத்துக்கு ஒரு சட்டம், வரி அமைப்பு, நிர்வாகம் என இருப்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. வரி விதிப்பு, நிலம், இயற்கை வளங்கள் மீதான கட்டுப்பாடுகள், கல்வி, விவசாயம், வர்த்தகம் என சகல அம்சங்களிலும் மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் பாஜக கொண்டுவருவது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு பெரும் ஆதாயம். எனவே, பாஜகவின் எதேச்சிகார, ஒற்றையாட்சியை நோக்கிய திட்டமிடல் என்பது கார்ப்பரேட்களுக்கு பெரும்வசதி.  

எனவேதான், பெரும்கார்ப்பரேட் முதலாளிகள் நவீன தாராளமயக் கொள்கைகளை வேகப்படுத்தி தாங்கள் லாபம் ஈட்டும் வாய்ப்புகளை  ஏற்படுத்தித் தரும் பாஜகவிற்கு ஏகோபித்த ஆதரவையும், நிதி உதவிகளையும் செய்து வருகிறார்கள். பாஜகவின் வெறுப்பரசியல் பிரச்சாரங்களுக்கு உதவி செய்கிறார்கள். இதைத்தான் நாம் வகுப்புவாத-கார்ப்பரேட் கூட்டு எனக் கூறுகிறோம். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் மையத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டங்களில், அதானி கலந்துகொண்டதை தான் நேரில் கண்டதாக, ஆர்.எஸ்.எஸ்சில் இருந்து வெளியேறி “நரக மாளிகை” என்ற அனுபவ நூலை எழுதியுள்ள சுதிஷ் மின்னி குறிப்பிட்டுள்ளார்.  2002ல் குஜராத்தில் பாஜகவின் நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொடூரமான சம்பவத்தை டாடா போன்ற பழைய தொழிலதிபர்களின் தலைமையின்கீழ் அப்போதிருந்த இந்திய தொழிற் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) கண்டித்தது. அமெரிக்காவுக்குள் மோடி செல்வதற்கு பத்தாண்டுகள் வரை (பிரதமர் ஆகும் வரை) தடை போடப்படும் அளவுக்கு, மோடிக்கு அப்போது அவப்பெயர் ஏற்பட்டது. மோடி மீதான அவப்பெயரைத் துடைக்க கௌதம் அதானி பெரும் முயற்சிகள் எடுத்தார். சி.ஐ.ஐக்கு மாற்றாக மாபெரும் போட்டி தொழில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, ஒரு தொழில்முனைவோர் மாநாட்டை குஜராத்தில் நடத்தினார். ’தொழில் முன்னேற்றத்துக்கான தலைவர் மோடி’ என உலக வர்த்தக அரங்கத்தில் மோடியை முன்னிறுத்தினார். தற்போது நிலவி வரும் கார்ப்பரேட் இந்துத்துவ களவுக்கூட்டணி இந்தியாவில் இப்படித்தான் வலுப்படுத்தப்பட்டது. 

ஜெர்மனியில் ஹிட்லரும் இதே பாணியில்தான் செயல்பட்டான். யூதமக்களுக்கு எதிரான இனஅழிப்பில் ஹிட்லரின் நாஜி அரசு ஈடுபடுவதற்கு, அன்றைய ஜெர்மானிய பெருமுதலாளிகளும் பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பனிகளும் எப்படி துணை புரிந்தன என்பது குறித்த பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன.   இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறையை சிதைத்து எதேச்சிகார அரசைக் கட்டமைக்க மோடி தலைமையிலான பாஜக முயன்று வருகிறது. இதுவரை  இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான அரிசி, கோதுமைக்குக் கூட ஜி.எஸ்.டி விதித்துள்ளது மோடி அரசு. மறுபுறம் கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை என பல அனுகூலங்களை வழங்கி வருகிறது. நடப்புக் குளிர்காலக் கூட்டத்தொடரில், விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி போராடிய 29 எம்.பி.க்களை இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

கார்ப்பரேட்களிடம் வரி போட பாஜக அரசு தயங்குவதால் தான், உழைக்கும் மக்கள் வாங்கும் அரிசி மீது கூட வரி போடுகிறது என்பதை நாம் உழைக்கும் மக்களிடையே உரக்கச் சொல்ல வேண்டும். அன்றைக்கு உப்பு மீது வரி விதித்த பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக விடுதலைப் போராட்ட இயக்கம் நடைபெற்றது. இன்றைக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி போட்டு, கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்காக மட்டுமே ஆட்சி நடத்தும் மோடி அரசாங்கத்திற்கு எதிராக நாம் விடுதலைப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.  வாழ்வாதாரப் பிரச்சனைகள் பக்கம் மக்களின் கவனம் செல்லக்கூடாது என்பதால், இந்துக்களுக்கு ஆபத்து, இந்து கோவில்களுக்கு ஆபத்து எனப் பொய்ப் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்களை வெறுப்பரசியல் மோசடிக்குள் ஆழ்த்திட மோடி தலைமையிலான பாஜக முயன்று வருகிறது. இதை நாம் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். 

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை ஒவ்வொன்றாக பாஜக தகர்த்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைக் காப்பாற்ற வேண்டும் என்றால், இந்திய அரசியல் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதற்கு, போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு, பாசிச தன்மைகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பாஜக அரசை எதிர்த்தும், அது கடைப்பிடிக்கும் நவீன தாராளமயக் கொள்கையை எதிர்த்தும் வலுவான ஒன்றுபட்ட இயக்கத்தை நாம் நடத்த வேண்டும். சுருங்கச் சொன்னால் வகுப்புவாத-கார்ப்பரேட் கூட்டணியை எதிர்த்துப் போராட்டம் நடத்தி அரசியல் சட்ட விழுமியங்களைப் பாதுகாக்க 75வது சுதந்திர தினநாளில் நாம் சபதமேற்போம். 

;