இந்தியாவில் சாதி ஆணவப்படுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் 200க்கும் மேற்பட்ட சாதிய ஆணவப்படுகொலைகள் தமிழ் நாட்டில் நடந்துள்ளன. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், பிறந்த சாதியின் பெருமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகத் தங்கள் பெற்றோர்களாலேயே படுகொலை செய்யப்படுகிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தின் பாஜக அமைச்ச ரும், பிராமண சங்கத்தின் தலைவருமான பண்டிட் விஷ்ணு பிரஜோரியா சமீபத்தில், “நாட்டில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பிராமணர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும். கல்வி கற்பது கூட முக்கியமில்லை. நான்கு குழந்தைகள் பெற்றுத் தருவதுதான் முக்கியம்” என்று பேசியுள்ளார். ஒவ்வொரு இந்து பெண்ணும் பத்துக் குழந்தை களைப் பெற்றுக் கொடுப்பது இந்து மதத்திற்கு அவர்கள் செய்யும் உயர்ந்த கடமையாகும் என்று சங்கராச்சாரியார் ஒருமுறை பேசியிருக்கிறார். மனு தர்மத்தின் நிழல் கூடப் படாத இந்திய அரசியல மைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது என்ற கோல் வார்க்கரின் வாரிசுகள் இவ்வாறு பேசுவதில் வியப்பேதும் இல்லை.
சாதியமைப்பில் கொடூரமான ஏற்றத்தாழ்வுகள்
சாதியமைப்பில் கொடூரமான ஏற்றத்தாழ்வுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. எந்தச் சாதியில் பிறந்தாலும் பெண்கள் சூத்திரர்களே என்கிறது மனுதர்மம். சூத்திரர்களைப் போலவே பெண்களும் கல்வி கற்கக் கூடாது, சொத்துக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறது. பெண் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும். பெண்களின் மீது ஆணாதிக்க சமூகம் ஆதிக்கம் செலுத்துவதும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதும் உலகெங்கும் நடந்து வந்தாலும், இந்தியாவில் ஆணாதிக்கம் மட்டு மல்ல, சாதிய ஆதிக்கமும் சேர்ந்து பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் கொடூரமான தாக்குதல் களை நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் நிலை
சமூக சீர்திருத்த செயல்பாடுகளில் முத்திரை பதித்துள்ள தமிழ் மண்ணில், பெண்கள் குறித்த சில மதிப்பீடுகளிலும், வளர்ச்சிக் குறியீடுகளிலும் குறிப்பி டத்தக்க முன்னேற்றங்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், கவலை அளிக்கும் விதத்தில் பிற்போக்கான கருத்தியல்களும், அதன் விளைவாக பெண்களுக்குப் பாதகமான செயல்களும் தொடர்கின்றன. பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிலையங்களில், குடும்பங்களில் என எங்கும் பாலினப் பாகுபாடுகளும், வன்முறைகளும் அறங்கேறி வருகின்றன.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பங்கு
பொருளாதாரம், சமூகம், அரசியல், பண்பாடு என பெண்கள் மீது தொடுக்கப்படும் எந்தவிதத் தாக்குதல்க ளையும் எதிர்த்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் களம் கண்டு வருகிறது. கந்து வட்டி, நுண்நிதிக் கடன் கொடுமைகள், ஊடகங்களில் பெண்கள் மீதான பண்பாட்டு இழிவுகளுக்கு எதிராக, அரசியல் தளத்தில் பெண்களின் பங்கேற்புக்காக அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடந்து வந்த பாதை வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில் தான், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பெண்கள் மீதான சாதிப் பாரபட்சங்க ளுக்கு எதிரான மாநாட்டை நெல்லையில் நடத்துகிறது. மேற்சொன்ன அனைத்துவிதமான பாதிப்புகளோடு சாதிய ரீதியான பாதிப்புகளும் கூட்டுச் சேரும் போது, அதன் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கிறது.
பெண்கள் மீதான வன்முறைகள்
கல்வி, வேலை, தொழில், வர்த்தகம், வாழ்நிலை என அனைத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதைப் போலவே, பட்டியலி னப் பெண்களுக்கும் மற்ற பிரிவின பெண்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகளிலும், பட்டியலினப் பெண்கள் மீதான வன்முறைகளே சதவிகித அடிப்படையில் அதிகமாக உள்ளது. அத்தகைய வன்முறைகளில் ஒன்றுதான் சாதி ஆணவப்படுகொலை. 1960களில் சுயமரியாதைத் திருமணத்திற்குத் தனிச் சட்டம் இயற்றிய தமிழ் நாட்டில், இன்று சுயத் தேர்வுத் திருமணங்கள் வன்முறைக்கு உள்ளாகின்றன. “சாதிக்கு ஒரு சங்கம், சங்கத்திற்கு ஒரு தலைவன்” என்று சாதியைக் காத்து நிற்கும் நிலையில், இந்துத்துவ சக்திகள் இதனை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலைகள்
இந்தியாவில் சாதி ஆணவப்படுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் 200க்கும் மேற்பட்ட சாதிய ஆணவப்படுகொலைகள் தமிழ் நாட்டில் நடந்துள்ளன. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், பிறந்த சாதியின் பெருமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகத் தங்கள் பெற்றோர்களாலேயே படுகொலை செய்யப் படுகிறார்கள். சாதியின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெண்கள் மீது சுமத்தப்பட்டி ருப்பதால், சாதி அடுக்கில் மேலிருந்து கீழ் வரை அனைத்து அடுக்கில் உள்ள பெண்களும் சாதிய வன்கொடுமைகளுக்கு இலக்காகிறார்கள். பழமைவாத இந்துத்துவக் கருத்துகளின் ஊடுருவல் இதனை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
தலித் பெண்களின் மீதான தாக்குதல்கள்
இந்தியாவில் தலித் பெண்கள் சாதி, வர்க்கம், பாலினம் என்ற மும்முனைத் தாக்குதல்களைச் சந்திக் கின்றனர். தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தின் தகவலின்படி, ஒவ்வொரு நாளும் பத்து பட்டியல் சாதி, பழங்குடி பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளா கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு பட்டியல் சாதி, பழங்குடி பெண்ணோ, குழந்தையோ சாதிய வன்கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு முயற்சி செய்தல், கடத்தல், கட்டாயத் திருமணம், அவமரியாதை என பல்வேறு விதங்களில் தலித் பெண்கள் மீது தாக்குதல்கள் ஏவப்படுகின்றன.
சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு
நாட்டில் சிங்காரவேலர், பெரியார், சாவித்திரிபாய் பூலே, டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் குறிப்பிடத் தக்கவை. தமிழ்நாட்டில் விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் பெரியாரின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. “கற்புக்கரசி இருக்கிறாள். கற்புக்கரசன் உண்டோ?” என்றார் பெரியார். “பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும்” என்றார். “ஆண்மை எனும் ஆணவம் ஒழியும் போது, பெண்மை எனும் அடிமைத்தனம் ஒழிகிறது. அவர்கள் இருவரும் மனிதர்கள் என்கிற மனிதத் தனம் மட்டும் இருக்கட்டும்” என்றார்.
இடதுசாரி பெண்கள் அமைப்புகளின் பங்கு
இத்தகைய சட்டங்களைக் கைவாளாகப் பயன் படுத்திக் களம் காண்பதில், வேறெந்த அமைப்புகளை யும் விட இடதுசாரி பெண்கள் அமைப்புகளே முன்ன ணியில் நிற்கின்றன. ஏனெனில், பெண் உரிமை என்பது இடதுசாரி பெண்கள் அமைப்புகளின் கொள்கை வழிப்பட்டது. சித்தாந்த வழிப்பட்டது. சமரசத்திற்கு அப்பாற்பட்டது. அன்னை லட்சுமி, ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் மைதிலி சிவராமன் என நமது முன்னோடிகள் கட்ட மைத்த பாதையில், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக எப்போதும் முழங்குவோம்!
நெல்லையில் கூடுவோம்.
சமத்துவம் காப்போம்!
கட்டுரையாளர் : அகில இந்திய துணைத் தலைவர்,
ஜனநாயக மாதர் சங்கம்