articles

img

ஓய்வூதியர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை மின்வாரிய ஓய்வூதியர் மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேச்சு

பணி ஓய்வு பெற்ற பிறகு சிதறிக் கிடக்கும் ஓய்வூதியர்களைத் திரட்டு வது சவால் நிறைந்த பணியாகும். ஓய்வு பெற்றவர்களை ஒரு சங்கத்தின் கீழ் அணி திரட்டி அமைப்பாக உருவாக்கிய தலைவர்கள் து.ஜானகிராமன், எஸ்.பஞ்சரத்தினம் எஸ்.ஜெகதீசன், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், உள்ளிட்டோரின் உழைப்பு சாதாரணமானது கிடையாது. 

ஓய்வு பெற்று வயதாகும் போது கூடுதல் சுமை ஏற்படுகிறது. பொருளாதார சிக்கல் வருகிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்த ஓய்வூதியர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைப் பாதுகாப்பது அரசின் கட மையாகும். மூத்த தலைமுறையை பாது காப்பதில் அரசு வரவு செலவாகப் பார்க்கக் கூடாது. 

இந்தச் சூழ்நிலையில், முதியவர்கள் பெற்று வந்த சலுகைகளை படிப்படியாக பறித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்திற் கான சலுகையை மோடி அரசு அடி யோடு ரத்து செய்துவிட்டது. பல்வேறு சிக்கல்களில் உள்ள ஓய்வூதியர்களை பாதுகாக்க பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்தினால் தான் குறைந்தபட்ச பாதுகாப்புடன் அவர்கள் வாழ முடியும். 

புதிய ஓய்வூதிய திட்டம் என்பது பென் ஷன் திட்டமல்ல. ஊழியர்களின் பணத்தை எடுத்துக் கொண்டு அதில் பாதியை நமக்கே திரும்பத் தரும் திட்டமாக அது உள்ளது. எனவே, நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். ஆனால், ஓய்வூதி யம் வழங்குவதற்குக் கூட அரசிடம் பணம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை ஏற்க முடியாது.

செல்வ வரி விதித்திடுக!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை படிப்படியாக நிறுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் வளர்ச்சி, கிராம வளர்ச்சி என பல்வேறு திட்டத்திற் கான நிதியை குறைத்த பெருமை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனையே சேரும். கார்ப்பரேட் நிறுவ னங்களின் சொத்துக்கள் மீது செல்வவரி போட்டால், பல லட்சம் கோடி  ஒன்றிய அரசுக்கு வருமானம் கிடைக்கும். இத னால் அந்த முதலாளிகளுக்கு எந்த நஷ்ட மும் இல்லை. லாபத்தில் மட்டுமே சிறு அளவு குறையும். கார்ப்பரேட் நிறுவ னங்களிடம் சொத்து வரி வசூல் செய்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர முடியும்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியைக் குறைக்கும் அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. இந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5% வரி குறைக்கப்பட்டுள்ளது. உலகிலே யே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறை வான வரி விதிப்பது இந்தியாவில் மட்டும் தான்.  

இலங்கையில் இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.கொள்கை மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையில்  அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அத்தகைய ஆட்சி மாற்றம் இந்தியாவில் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நமது பிரச்சனைகள் தீரும். உணவு உற்பத்தி,  விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்ட பல வளர்ச்சி களைக் கண்டுள்ளது நமது நாடு. கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த நமது நாட்டில், வறுமை, பட்டினியைத் களை தீர்க்க, கொள்கை மாற்றம் ஏற்பட, உழைப்பாளி வர்க்க ஒற்றுமை ஏற்பட வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய 
உரையில் இருந்து...