articles

img

உமது வினை உம்மைச் சுடும்! - கமலஹாசன் எம்.பி

உமது வினை உம்மைச் சுடும்!

இந்திய அரசியல் வரலாற்றில் கலைத்துறையிலிருந்து பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், மாநிலங்களவையில் தனது கன்னி உரையின் மூலமாகவே ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்ப்பவர்கள் சிலரே. அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள், நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிப்ரவரி 4 அன்று  ஆற்றிய உரை வெறும் உணர்ச்சிப் பெருக்கு மட்டுமல்ல; அது ஆளும் அரசின் மீதான தர்க்கரீதியான சாடல். குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், ‘உயிருள்ள பிணங்களாக’ மாற்றப்படும் வாக்காளர்கள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் சிதைவு குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் மிக முக்கியமானவை. அவ்வுரையின் கட்டுரை வடிவம்:

இந்தியா என்பது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்றுதான் நமது அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், இன்று அந்த எதார்த்தம் சிதைக்கப்பட்டு, மாநிலங்களின் உரி மைகள் பறிக்கப்படும் ஒரு சூழல் நிலவுகிறது. எனது அரசியல் ஆசான்களான பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கை வழி நின்று, இந்த உயரிய அவையில் எனது கருத்துகளைப் பதிவு செய்கிறேன். கூட்டாட்சியும் மொழியும் தமிழ் மொழி மீதான காதல் என்னை அண்ணாவை நோக்கி ஈர்த்தது. ‘துரை’ என்றால் பிரெஞ்சு மொழி யில் ராஜா என்று பொருள். அவர் ராஜாவாகப் பிறக்க வில்லை; ஆனால் நாங்கள் அவரை எங்கள் மனங்க ளின் ராஜாவாக முடிசூட்டிக்கொண்டோம். எமது மொழி, கலாச்சாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு படையெடுப்பையும் எப்படி எதிர்கொள் வது என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இன்று அவர் பேசிய அதே அவையில் நின்று, அதே உறுதியுடன் நான் பேசுகிறேன். பொருளாதாரம் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

நான் உயர் நிலைப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காதவன் தான். இருப்பினும், நீங்கள் பயின்ற பல்கலைக் கழகங்களின் ‘வெளி மாணவனாக’, ஒரு தமிழனாக எனக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. கோப மின்றி எழுத மகாத்மா காந்தியும், தர்க்கத்தைச் (Logic) சேர்க்க பெரியாரும் எனக்குக் கற்றுத் தந்துள்ள னர். நாம் விவாதிக்கும் கடந்த காலத்திலோ அல்லது தொலைதூர எதிர்காலத்திலோ நாம் வாழப்போவ தில்லை; இந்த நிகழ்காலத்தில்தான் வாழ்கிறோம், இறக்கிறோம். எனவே, இந்த நிகழ்காலத்தைச் சரி செய்வதே நமது உடனடி கடமை. ‘உயிருள்ள பிணங்களின்’  பூமியா இது? எனது முதன்மையான கவலை, வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. நமது தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் உரிமையைச் சரிபார்க்கும் விதத்தில் பல குளறுபடிகள் உள்ளன. எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி  மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. நவீன இலக்கியமும் இணையமும் கூட பிழைகளை மன்னிக் கின்றன; ஆனால் நமது தேர்தல் ஆணையம் மன்னிப்ப தில்லை. தேர்தல் ஆணையம் என்பது ஆங்கிலப் பாடம் நடத்தும் ஆசிரியர் அல்ல; அது ஜனநாய கத்தின் காவலர்: ஏற்கெனவே பீகார் மாநிலம் பல ‘உயிருள்ள பிணங்களின்’ (Living Cadavers) பூமியாக மாறி விட்டது. அதாவது, மனிதர்கள் உயிரோடு இருப்பார் கள், ஆனால் ஆவணங்களில் அவர்கள் இறந்த வர்களாகக் காட்டப்படுவார்கள். இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேரின் வாக்கு ரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் உயிருள்ள பிணங்க ளாக மாற்றப்படுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். ஜனநாயகத்தில் எவரும் நிரந்தர வெற்றியாளர் அல்ல. இந்த மாபெரும் ஜனநாயக ஆற்றல் முன்னோக்கிச் செல்ல வழிவிடுங்கள், இல்லையென்றால் அதன் பாதையிலிருந்து விலகி இருங்கள். அதிகாரத்திற்கு ஒரு எச்சரிக்கை திருப்தியற்ற இந்த அவையின் மறுபாதி இல்லா மல், மாண்புமிகு இந்த அவை நம்மில் யாருக்கும் எந்த அர்த்தமும் தராது. குறைந்தபட்சம், நாம் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்படவாவது ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று, யாரும் எதற்கும் ஒப்புக்கொள்வதில்லை. அனைத்து ஒப்பந்தங்க ளும் மீறப்படுகின்றன. இந்தத் திசைமாற்றத்தில் எங்களுக்கு உதவ நீங்கள் மறுத்தால், அரைகுறை யான, முழுமையடையாத சட்டவிரோத தேர்தல் வெற்றியைத் தவிர வேறு எதையும் நீங்கள் சாதிக்கப் போவதில்லை. ஜகந்நாதப் பெருமானின் தேர்க் சக்கரங்கள் போல ‘மாற்றத்தின் சக்கரங்கள்’ (The Wheels of Change) வந்துகொண்டிருக்கின்றன.

இது தனி நபர்கள் மீதோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசாங் கத்தின் மீதோ தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல; இது கருத்துகளின் மோதல் மட்டுமே. இந்த உலகில் எந்த அரசாங்கமும் நிரந்தரமானது அல்ல என்பது தான் எழுதப்படாத அரசியல் விதி. அந்த விதி தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இளைய தலைமுறை (Gen-Z) நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. முற்போக்கான ஜனநாயகத்து டன் நாமும் இணைந்து வளர்வோம். அப்போதுதான் ‘நாளை நமதாகும்’. தமிழர் பிச்சை ஏற்கமாட்டார்! தங்கையே, (நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே) தியாகராஜ சுவாமிகள் பிச்சைப் பாத்திரத்தில் எடுத்த சில்லரைகள் இன்றைய காலத்திற்கு உதவாது என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான்; அது காற்றோடு போய் பல ஆண்டு கள் ஆகிவிட்டன. பிச்சைக் குவளையை இன்று பெரும் உண்டியலாக மாற்றி நிதி திரட்டும் நீங்கள், ‘தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என்று எள்ளி நகையாடு கிறீர்கள்.

உண்மைதான், தமிழ் பிச்சை எடுக்க உதவாது; திருடவும் உதவாது! தமிழர் பிச்சை எடுக்க மாட்டார்; அதிலும் உங்கள் பிச்சையை ஒருபோதும் ஏற்கமாட்டார். ஓட்டையும் நாட்டையும் விற்க இந்த கமலஹாசன் ஒருபோதும் முனையமாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தைச் சாபமாகப் போடுகிறேன். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தனின் கூற்று இது: “உம் வினை உம்மைச் சுடுக; ஓட்டப்பமும் வீட்டைச் சுடுக!” வந்தீர், வென்றீர், ஒருநாள் செல்வீர் - இதுவே உலக நியதி, அரசியல் நியதியும்கூட. எங்கள் நாடு நீடூழி வாழும்.  தொகுப்பு : ச.வீரமணி