articles

img

கடனை செலுத்தாத கார்ப்பரேட்டுகளின் எண்ணிக்கையை பராமரிக்கவில்லை

கடனை செலுத்தாத கார்ப்பரேட்டுகளின் எண்ணிக்கையை பராமரிக்கவில்லை

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,  கேள்வியில் அதிர்ச்சி

புதுதில்லி, பிப்.6.  100 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கையை  பராமரிக்கவில்லை என ஒன்றிய அரசு, ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு அதிர்ச்சியான பதிலை அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு? கடன் நிலுவைகளில் சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு? கடன் செலுத்தத் தவறிய நிறுவனங்களின் விளம்பரதாரர்கள் (Promoters) மற்றும் இயக்குநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக் கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்விக்கு பதிலளித்த கார்ப்பரேட்  விவகாரங்களுக்கான  அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் திவால்நிலை மற்றும் திவால் சட்டம் 2016 ஆகியவற்றின் விதிகளின் கீழ் இது போன்ற தரவுகளை மையப்படுத்தி பராமரிக்கப்படவில்லை என நழுவியுள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும்  நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகை பற்றிய விவரங்களை தரவேண்டிய நிலை இந்தச் சட்ட வரையறைக்குள் வராது எனவும் தவிர்த்துள்ளார்.