articles

img

திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும்? - சரவணன் கந்தசாமி

 திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும்?  நியூரம்பெர்க் (“Nuremberg”)

நியூரம்பெர்க் ‘Nuremberg’ என்ற இத் திரைப்படத்தை சமீபத்தில் பிரைம் வீடியோ-வில் பார்த்தேன். இது அனைவரும் முக்கியமாகப் பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம். பொது வாக, இத்தகைய அரசியல் திரைப்படங் களைப் பற்றிச் செயல்பாட்டாளர்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் பொதுவெளியில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள் வார்கள். ஆனால், இத்திரைப்படத்தைப் பற்றிய ஒன்றிரண்டு விமர்சனங்களைத் தவிர, பெரிதாகப் பொதுவெளியில் இது பேசும்பொருளாக மாறவில்லை. ஏனோ இத்திரைப்படம் கவனம் பெறாமலே போயிருக்கிறது. இத்திரைப்படம் ஜாக் எல்-ஹாய் (Jack El-Hai) எழுதிய ‘The Nazi and The Psychiatrist’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த நாவலும் பெரிதாக வாசிப்புக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதும் ஆச்சரியமான ஒரு உண் மையே. நியூரம்பெர்க் விசாரணைகள் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜெர்மனியின் நாஜி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டபின், நாஜி கட்சியின் தலைமை சரணடைய முடிவெடுத்து ஆங்காங்கே சரணடைகிறார்கள். அப்படி ஆஸ்திரியாவில், ஹிட்லருக்கு அடுத்த நிலையில் இருந்த ஹெர்மான் கோரிங் (Hermann Göring) சரணடைகிறார். இவரோடு சேர்த்து நாஜி கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் சரணடை கிறார்கள். இவர்களையெல்லாம் சர்வதேச சமூகத்தின் முன் விசாரணை செய்து, அவர்களின் செயல்களைக் கேள்விக்குள்ளாக்கி, அவர்களது கொடிய நோக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்ற நோக் கத்துடன் விசாரணை ஆணையத்தை அமைக்க நேச நாடுகள் முடிவெடுத்தன. இதற்காகச் சரணடைந்தவர்களை எல்லாம் ஜெர்மனியில் உள்ள ‘நியூரம் பெர்க்’ நகருக்கு நேச நாட்டுப் படைகள் கொண்டு வந்தன. அங்கேதான் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த விசார ணை நடக்கிறது.  ஏன் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது? இந்த நகரில்தான் 1935-ஆம் ஆண்டு, நாஜி கட்சி முக்கியமான ஒரு சட்டத் தைக் கொண்டு வந்தது. அதன் பெயர் ‘நியூரம்பெர்க் சட்டங்கள்’. இந்தச் சட்டத் தைக் கொண்டுதான் யூத இன மக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்றும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வை ஒடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக் கப்பட்டது. ஜெர்மானியப் பொதுச் சமூகத்திலிருந்து யூத இன மக்களைத் தனிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இது. இந்தச் சட்டத் தைக் கொண்டு வந்தவர்தான் ஹெர் மான் கோரிங். இந்தச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டுதான் சிஏஏ என்கிற இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறப்படுகிறது. தற்கொலை எண்ணமும் மனநல மருத்துவரும் நாஜி கட்சியின் தலைமைத் தலைவர் தற்கொலை செய்து கொண்டதால், அந்தச் கட்சியின் இரண்டாம் கட்டத் தலை வர்களுக்கும் அத்தகைய தற்கொலை எண்ணம் இருக்கக்கூடும் என அஞ்சப் பட்டது. எனவே, விசாரணை முடியும் வரை அவர்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்யவும், அவர்களோடு உரையாடி அவர்களின் எண்ணங் களை அறிந்து கொள்ளவும் ஒரு மனநல மருத்து வரை அமெரிக்க ராணுவம் நியமிக்கிறது. அவரும் சிறைக்கைதிகளோடு தொடர்ந்து உரை யாடுகிறார். இந்த உரையாடல்களின் போது அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நாவல்; அந்த மனநல மருத்துவரே இந்த நூலின் ஆசிரியர். மருத்துவர் சிறைக் கைதி களை நோயாளிகள் என்ற அடிப்படை யிலேயே அணுகி, அவர்களுடன் – குறிப்பாகக் கோரிங்குடன் – நெருங்கிப் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறார். இதன் மூலம் விசாரணை ஆணையத்திற்கும் அவர் உதவி செய்கிறார். ஹிட்லர் – ஒரு கடவுள் பிம்பம் ஹெர்மான் கோரிங்கிடம் உரை யாடும் போது, “ஏன் நீங்கள் ஹிட்லரைப் பின்பற்றுகிறீர்கள்? அவரைத் துதிபாட வேண்டிய தேவை என்ன?” என்று கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “அவர்தான் எங்களை ஜெர்மானியராக உணர வைத்தார்” என்று அளித்த பதில் முக்கியமானது. இனப்பெருமையைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் மக்களிடையே பிரிவினை விஷம் விதைக்கப்பட்டிருக்கிறது. ஹிட்லரை ஒரு தேவதூதர் போலவும், அவரை விமர்சிப்பதோ கேள்வி கேட்பதோ இறை நிந்தனைக்குச் சமம் என்றும், அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்றும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தி தற்போது வரை உலகெங்கும் செயல்பாட்டில் உள்ளது. நம் நாட்டில் கூட மதப்பெருமை பேசப்படுகிறது; இதன் மூலம் மத நம்பிக்கை என்பது மதவெறியாகத் தூண்டிவிடப்படுகிறது. பிரதமரை விமர்சிக்கக் கூடாது, அவர் தூய்மையான அப்பழுக்கற்றவர், தவறே செய்ய மாட்டார் என்ற பிம்பம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு வீரியமானது என்றால், உதாரணமாகச் சமீபத்திய யுஜிசி UGC விதிகள் தொடர்பான எதிர்வினைகளில், மனிதவள மேம்பாட்டு அமைச்சரையும் சட்ட அமைச்சரையும்தான் மக்கள் குற்றம் சாட்டினார்களே தவிர, இந்த விதிகள் தொடர்பாகப் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர் ஒரு புனிதர் என்றும் கருதி அவரை விமர்சிக்கவில்லை. வதை முகாம்களின் கொடூரம் இதுவரை வதை முகாம்களைப் பற்றிப் படித்ததுண்டு, ஆனால் அதன் காணொலிகளைப் பார்த்ததில்லை. நாஜிகள் தாங்கள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் சுமார் 1200 வதை முகாம் களைச் செயல்படுத்தியுள்ளனர். இந்தத் திரைப்படத்தில் விசாரணை ஆணை யத்தில் சாட்சியாக வதை முகாம்கள் குறித்த 5 நிமிடக் காணொலி காட்டப் படுகிறது. அவை நெஞ்சை உலுக்கும் காட்சிகள். மனித உடல்களைக் குப்பை களைப் போல மிகப்பெரிய வாகனங் களில் அள்ளிப்போட்டு அப்புறப்ப டுத்துவது மிகக் கொடிய செயலாகும்.  இந்த வதைமுகாம்களில் கம்யூனிஸ் டுகள், கலைஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் யூத மக்கள் எனப் பலரையும் அடித்தே கொல்வது, சுட்டுக் கொல் வது, பட்டினி போடுவது, விஷவாயு கொடுப்பது, 100 அடி உயரத்திலிருந்து தள்ளி விடுவது, கடுங்குளிரில் நிர்வாணமாக நிற்க வைப்பது எனச் சித்ரவதை செய்து சுமார் 60 லட்சம் பேரைக் கொன்றுள்ளனர். இந்தக் காணொலி ஒளிபரப்பாகும் போது, எந்த விதச் சலனமுமின்றி நாஜி தலைவர்கள் குற்றவாளிக்கூண்டில் அமர்ந்திருப் பார்கள். இந்த மாதிரியான முகாம்கள் இன்னமும் அமெரிக்காவில் I.C.E (Immigration and Customs Enforce ment) என்ற பெயரில் செயல்படுத்தப் பட்டு, அவற்றில் ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பினத்தவரை அடைத்து வைக்கி ன்றனர். இந்தியாவிலும் கூட அஸ்ஸா மில், இந்தியக் குடியுரிமையை நிரூபிக்காத சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்தும் தடுப்புக் காவல் முகாம்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. இறுதியாக, வானொலி நேரலை யில் அந்த மனநல மருத்துவர் கூறும் கருத்து கவனத்திற்குரியது. அதாவது, நாஜிகள் ஜெர்மனியில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பது தவறான எண்ண மாகும்; அவர்கள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ளனர். தன்னுடைய பதவி மற்றும் அதிகார வெறிக்காக ஒரு குறிப்பிட்ட பகுதியினரை அழித்தொ ழித்து, அவர்களின் சடலங்களின் மீதேறி ஆள்பவராக அமர்ந்து, இன்னொரு பகுதி யினரை அடக்கி ஒடுக்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள்தான் நாஜிகள். இவர் கள் நம்மிடையேதான் இருக்கின்றனர். இது கசப்பான உண்மை; இந்த உண்மை இப்போதும் கூட அப்படியே பொருந்திப் போகிறது.