தடைவிதிக்கப்பட்ட நூலகத்தின் வாயிலிலேயே மார்க்ஸிற்கு சிலை! தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உணர்ச்சிப் பெருக்கு!!
சென்னை, பிப். 6 - கன்னிமாரா நூலகத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள தோழர் காரல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை யன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு மாமேதை காரல் மார்க்ஸிற்கு புகழஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: பெ. சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று சிலை நிறுவியதற்காக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். “உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ சக்திகளுக்கு அச்சத்தையூட்டுபவராக தோழர் காரல் மார்க்ஸ் உள்ளார். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். இழப்பதற்கு ஏதுமில்லை. அடை வதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது என்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இறுதிபகுதி வாசகத்தை நனவாக்குவதுதான் காரல் மார்க்ஸ் சிந்தனைக்கு செலுத்தும் மரியாதை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி களும் ஒன்றிணைந்து காரல் மார்க்சின் சிந்தனை களை இந்தியாவில் நடைமுறை சாத்தியமாக்கு வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த சிலை இங்கே நிறுவப்பட்டுள்ளதன் மூலம், மார்க்சிய தத்துவம்; சிந்தனை நாட்டு மக்களிடையே, வளாகத்திற்கு வரும் உலக மக்களால் நினைவு கூரப்படும்” என்றும் அவர் கூறினார். மு. வீரபாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குறிப்பிடுகையில், “பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசத் தலைவர் காரல் மார்க்ஸ் சிலை உருவாவதற்கு எடுக்கப்பட்ட பலரின் முயற்சியை கரம் கூப்பி வணங்குகிறோம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், கன்னிமாரா நூலகத்தில் போல்ஷ்விக், ரஷ்ய புத்தகங்கள், மார்க்ஸ், லெனின் புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்த கைய நூலகத்தின் வாயிலில் மார்க்ஸ் சிலை நிறு வப்பட்டுள்ளது. மார்க்சின் சிந்தனைகள் கனவு அல்ல. அது நிஜப்படும். உலகம் முழுவதும் சமதர்மமும் சமத்துவமும் கோலோச்சும்” என்றார். வைகோ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகை யில், “லண்டனில் இருந்த நூலகத்தை முழுமையாக பயன்படுத்தியவர் காரல் மார்க்ஸ். ஒவ்வொரு நாளும் கடைசி நபராக நூலகத்திலிருந்து வெளி யேற்றுவார்கள். அத்தகையவரின் சிலையை நூலகத்தின் நுழைவுவாயிலில் வைத்திருப்பது பொருத்தமானது. காரல் மார்க்ஸ் சிலை தத்ரூப மாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது” என்றார். தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், “பாட்டாளி வர்க்கத்தின் அரசியலை விதைத்தவர் மார்க்ஸ். உலகம் தழுவிய அளவில் உழைக்கும் மக்கள் தங்களின் விடு தலைக்கான கோட்பாட்டு தந்தையாக அவரை ஏற்று, இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் செல்லும் சூழல் வளர்ந்திருக்கிறது. கட்சிகளை, ஆட்சி நிர்வாகத்தை வீழ்த்த முடியும். தத்துவத்தை யாராலும் வீழ்த்த முடியாது. அந்த வகையில் மார்க்சியத்தையும் வீழ்த்த முடியாது. இன்றைக்கு இந்தியாவிலும் இடதுசாரி அரசியல் வலிமைப்பெற்று வருகிறது. வலதுசாரிகளுக்கு எதிராக போராடுகிற மகத்தான கோட்பாடாக மார்க்சி யம் துணை நிற்கிறது” என்றார்.