articles

img

வேம்பு - முரளி வீட்டு மாமரத்தில் கட்டி இருக்கும்

வேம்பு

முரளி வீட்டு மாமரத்தில் கட்டி இருக்கும் ஊஞ்சலில் முரளியும் அவனது தோழி உமாவும் மிகவும் மகிழ்ச்சியாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார்கள்

அப்போது காம்பவுண்ட் கதவை திறந்து  கொண்டு முரளியின் பாட்டி கமலாவும் உமா வின் பாட்டி அவரவர் கனகாவும் வருவதை பார்த்ததும் இருவரும் ஆடுவதை நிறுத்தி விட்டு, “பாட்டீ” என அழைத்துக் கொண்டு ஓடிப்போய் அவரவர் பாட்டியை கட்டி ப்பிடித்துக் கொண்டார்கள். அன்றைக்கு பாட்டிகள் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வந்திருந்தார்கள். அதை வாங்கி கொறித்தபடியே இருவரும் மறுபடி ஊஞ்சல்  ஆட ஓடிவிட்டனர். முரளி வீட்டின் அடுத்த வீட்டில் தான்  உமா வசிக்கிறாள் ஒரே வகுப்பில் தான் இரு வரும் படிக்கிறார்கள் எனவே தினமும்  நாள் தவறாமல் குழந்தைகள் விளையாடு வதும் நடைபயிற்சிக்கு போகும் பாட்டி கள் தின்பண்டங்கள் தருவதும் நடக்கும். சில சமயம் பாட்டிகள் கதைகளும் சொல்வ துண்டு. உமாவின் அப்பாவும் முரளியின் அப்பாவும் சிறுவர்களாக இருக்கும் பொழுதே அந்த வீடுகளுக்கு வந்து விட்டனர்.  இரண்டு குடும்பங்களுக்கும் பல வருட பழக்கம் ஆனதால் இரண்டு பாட்டிகளும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர். காய்கறிகள் வாங்க போவது, கோவி லுக்குப் போவது, அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களின் விசேட நிகழ்ச்சிகளுக்கு போவது  என எங்கு போனாலும் ஒரே நிறத்தில் சேலை  அணிந்து சேர்ந்துதான் போவார்கள். தெரு வில் இவர்களுக்கு இரட்டைக் கிளவிகள் என்ற செல்லப் பெயரும் உண்டு  ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு விஷயத்தில் மட்டும் கடும்  போட்டி நிலவும். இரண்டு பேர் வீட்டிலும் பெரிய வேப்பமரம் உண்டு. இரண்டு பாட்டி களும் தினமும் காலையில் அவரவர் வீட்டு  வேப்ப மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, கோலம் போட்டு விளக்கு ஏற்று வார்கள்.

யார் முதலில் வேப்ப மரத்திற்கு விளக்கு ஏற்றுவது என்பதில் போட்டி துவங்கும். கனகா பாட்டி வேப்பமரத்தடியில் போடும் கோலத்தை விட பெரிய கோலமாக கமலா பாட்டி போடுவார். கமலா பாட்டி வண்ணக்கோலம் போட்டால் அடுத்த நாள் கனகா பாட்டி ரங்கோலி போடுவாள். அல்  லது பூக்கோலம் போடுவாள். இவர்களின்  போட்டியை வேடிக்கை பார்ப்பது இரு வீட்டா ருக்கும் ஒரு பெரிய பொழுதுபோக்கு. ஒரு நாள் மாலை உமாவும் முரளியும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும்போது  உமா, “இன்று பாட்டியிடம் ஐஸ்கிரீம் வாங்கித்  தருமாறு சொல்லி இருக்கிறேன் “ என்றாள்.  முரளி” நான் கேக் கேட்டிருக்கிறேன்’ என்றான். “ஓ அப்படியா! இன்னைக்கு ரெண்டு பேரும் ஜாலியாக ஐஸ்கிரீம்  கேக் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே ஊஞ்ச லாடலாம்’ என பேசிக்கொண்டே இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள் வீட்டிற்கு பக்கத்தில் வந்த போது பார்த்தால், முரளி  வீட்டு வேப்ப மரத்தின் முன் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஊதுபத்தி வாச னையும், சாம்பிராணி வாசனையும் வந்து  கொண்டிருந்தது. பூஜை மணி அடிக்கும் சத்தமும் கேட்டது. முரளி எட்டிப் பார்த்து விட்டு உமாவிடம் “என் பாட்டி வேப்ப மரத்துக்கு பூஜை செய்வதில் மும்முரமாக இருக்கிறாள். உன் பாட்டி எங்கே என்று  பார்”என்றான். உமாவின் பாட்டி கண்களுக்கு  தென்படவில்லை. என்ன நடக்கிறது என  உமா கவனித்தாள். முரளி வீட்டு வேப்ப  மரத்தில் இருந்து பால் வடிந்து கொண்டி ருந்தது. அதற்காகத்தான் அந்த மரத்துக்கு பூஜை செய்து எல்லோரும் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  கனகா பாட்டியை தேடி உமா தன் வீட்டிற்குள் ஓடினாள். கனகா பாட்டி கூடத்தில்  உள்ள சோபாவில் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள். உமாவை பார்த்தவுடன், “ நம் வீட்டு வேப்ப  மரத்துக்கு நான் ஒரு நாள் கூட விடாமல் பூஜை செய்கிறேன்.

ஆனால் அவள், அதான்  அந்த கமலாவின் வேப்ப மரத்தில் மட்டும்  பால் வருகிறது. தெருவே அவ வீட்டு முன்  னால நிக்குது. எனக்கு அதை பார்க்கவே பிடிக்கவில்லை” என்று புலம்ப ஆரம்பித் தாள்.  உமாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு நாட்களாக வேப்ப  மரத்தில் பால் வடிகிறது. பூஜையும் நடக்கி றது. கமலா பாட்டி உற்சாகமாக இருந்தாள்.  கனகா பாட்டியை கண்டு கொள்ளவே இல்லை. தெருவில் போவோர் வருவோரிடம்  எல்லாம் எங்கள் வேப்ப மரம் தான் சக்தி  வாய்ந்த மரம் எனவேதான் என் பூஜை பல னால் பால் வடிகிறது என்று சத்தமாக கனகா  பாட்டி காதில் விழும்படி பேசுவாள். முர ளிக்கும் உமாவிற்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. மாலை நேரத்தில் ஊஞ்சல் ஆடுவது, பாட்டிகள் தின்பண்டம் வாங்கித் தருவது என எதுவுமே நடக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு போகும்போது உமா,  முரளியிடம் “ முரளி இந்த பாட்டிகள் இரு வரும் பேசிக்கொள்ளவே மாட்டார்களா? எனக்கு அழுகையா வருது. என்ன செய்ய”  என்றாள். “ஆமாம் உமா எனக்கும் அழுகை தான்  வருது. நாம இதை எப்படியாவது சரி செய்ய  வேண்டும்” என பேசிக்கொண்டே பள்ளிக் கூடத்துக்கு போனார்கள்.  அன்றைக்கு வகுப்பில் விஞ்ஞான ஆசி ரியர் தாவரங்கள் பற்றி பாடம் நடத்தும் போது, மரங்கள் தங்களை தாங்களே காப் பாற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. பூச்சிகள் மற்றும் காயங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு மரமும் ஒரு  விதமான திரவங்களை சுரக்கின்றன என  சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.  அப்போது திடீரென்று உமாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. வேப்ப மரத்தில் பால் வடிவது பற்றி ஆசிரியரிடம் விளக்கம் கேட்கலாம் என நினைத்தாள்.

வகுப்பு முடிந்த உடன் ஆசிரியரின் பின்னாலேயே முரளியையும் இழுத்துக் கொண்டு ஓடினாள். ஆசிரியரிடம் தங்கள் வீட்டு வேப்ப மரத்தில் பால் வடிவது பற்றியும் அதனால் பாட்டிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது பற்றியும் சொன்னார்கள். ஆசிரி யர் சிரித்துக் கொண்டே, “ இவ்வளவுதானா பிரச்சனை. நானே ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டுக்கு வந்து பாட்டிகளிடம் பேசு கிறேன் “ என்றார்.  சொன்னது போலவே ஞாயிற்றுக்கிழமை மாலை விஞ்ஞான ஆசிரியர் உமாவின் வீட்டிற்கு வந்தார். முரளியும் உமாவும் இரு வர் வீட்டிலும் அம்மா அப்பா பாட்டிகள் என  எல்லோரையும் அழைத்து வந்து ஆசிரி யருக்கு அறிமுகப்படுத்தினர்.  முரளி வீட்டு மரத்தடியில் தான் எல்லோ ரும் உட்கார ஏற்பாடு செய்யப்பட்டது. கனகா  பாட்டி அங்கு வரவே மாட்டேன் என பிடி வாதம் பிடித்தாள். ஆனால் உமாவின் அப்பா  அவளை சமாதானம் செய்து கூட்டிக் கொண்டு வந்தார். ஆசிரியர் அருகில் இருந்த வேப்ப மரத்தை காட்டி, ‘ உமா இந்த மரத்தில் தான்  பால் சுரந்ததா ‘ என்று கேட்டார். அவர் இப்படி  கேட்டவுடன் கமலா பாட்டி வேகமாக, “ஆமாம் ஆமாம் இது என்னுடைய மரம் “என பெருமையோடு கனகா பாட்டியை பார்த்துக் கொண்டு சொன்னாள். கனகா பாட்டி வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டார். இரு குடும்பத்தாரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். முரளியின் அப்பா “ சார் ஏன் இந்த மரத்தில்  மட்டும் பால் சுரக்கிறது. இரண்டு நாள் தான்  பால் வந்தது. இப்போது நின்று விட்டது’ என்றார். “அதற்கான காரணத்தை நான் விளக்கமாகச் சொல்கிறேன்’ என்றார் ஆசிரியர். “இயல்பாக வேப்ப மரத்தில் மாவுச் சத்து இருக்கும். வேப்ப மர இலைகள் அதை  சர்க்கரையாக மாற்றும்.

வேப்ப மரத்துக்கு அருகில் நீர் அதிகமாக ஆகிவிட்டால் மரத்தி லும் தண்ணீரின் அளவு அதிகமாகிவிடும் அப்போது மரத்தின் பட்டையின் அடியில் உள்ள திசு, இதை புளோயம் என்று சொல்லு வார்கள்.அது பாதிக்கப்படும் அப்போது பாதிக்கப்பட்ட பட்டையை பிளந்து கொண்டு  பால் போன்ற இனிப்பான திரவம் வடியும். இதைத்தான் பால் வடிகிறது என்று சொல் வார்கள். மரத்தில் தண்ணீரின் அளவு குறைந்து விட்டால், பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபடும். அப்போது பால் வடிவது நின்றுவிடும்’ என்று விளக்கிச் சொன்னார்.  எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.  கனகா பாட்டி ஆசிரியரிடம், “ஐயா, வேப்ப மரத்தில் பால் வடிவதற்கான காரணத்தை நல்லா புரியும் படி சொன்னீங்க. ரொம்ப நன்றி’ என்று சொல்லியபடி கனகாவை பார்த்தார். இரண்டு பேரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டனர். ஆசிரி யருக்கு நன்றி கூறி வழிஅனுப்பி வைத் தார்கள்.  உமாவிற்கும் முரளிக்கும் மிக்க மகிழ்ச்சி. நாளையிலிருந்து ஊஞ்சல் ஆடு வதும் பாட்டிகள் தின்பண்டம் வாங்கி வரு வதும் நடக்கும் என்று உற்சாகமானார்கள்.