நிலப்பிரபுவை தோற்கடித்த இத்தகா நகர கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஹன்னா ஷ்வெட்ஸ்
இத்தகா, நியூயார்க், நவ.12- மக்களை அதிர்ச்சியடையச் செய்த வெற்றியில், இத்தகா நகரத்தைச் சேர்ந்த மாணவர் இயக்க செயற்பாட்டாளர் மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஹன்னா ஷ்வெட்ஸ், தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட கேப்பே சுரெண்டாவை வீழ்த்தி, ஐந்தாம் வட்ட பொதுக் கவுன்சில் இடத்தைவென்றுள்ளார். தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் இடதுசாரி முன்னேற்ற இயக்கங்களின் கூட்டணியின் ஆதரவால் ஷ்வெட்ஸ் வெற்றி பெற்றார். இத்தகா, பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் இருந்தாலும், செல்வச் சீர்மையின்மை, உணவுக் குறைவு, வீட்டு வாடகை உயர்வு (அதன் விளைவாக வீடற்றோர் பெருகுதல்) மற்றும் வாழ்வுக் கட்டண நெருக்கடி ஆகிய பிரச்சனைகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி இவை தொடர்பான நீண்டநாள் தீர்வுகளை அளிக்கத் தவறியுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுரெண்டா, ஒரு நிலக்கிழார் மற்றும் முன்னாள் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநரும் ஆவார். ஷ்வெட்ஸ், டாம்ப்கின்ஸ் கவுண்டி தொழிலாளர் மையத்தின் தொழிலாளர் உரிமைகள் ஹாட்லைன்-இல் பணியாற்றி, துன்புறுத்தப்பட்ட தொழிலாளர்களின் திருடப்பட்ட ஊதியங்களை மீட்டுத் தர உதவியுள்ளார். 2024-இல் யூஏடபிள்யூ லோக்கல் 2300 வேலை நிறுத்தத்துக்கும், 2025-இல் ஐ.டி.ஏ. ஒப்பந்தப் போராட்டத்துக்கும் மாணவர் களின் ஒற்றுமை முயற்சிகளை ஒருங்கிணைத்தார். 2023 முதல் பாலஸ்தீன விடுதலைக்கான மாணவர் இயக்கங்களிலும் கலந்து கொண்டார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகா கிளை உறுப்பினரான அவர் “இத்தகா ஜஸ்ட் காஸ் கூட்டணி” யை நிறுவவும் வளர்க்கவும் உதவினார். இது தொழிலாளர்களை திடீரென வேலையை நீக்குவதைத் தடுக்க சட்டரீதியான “நியாயமான காரணமின்றி நீக்கம் செய்யக் கூடாது” என்ற கொள்கையை அமல் படுத்தும் சட்டத்திற்காக போராடி வருகிறது. வர்க்கப் போராட்டத்தின் தேர் ஜனநாயகக் கட்சியின் முன்னுரிமைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, சுரெண்டா தனது சொந்தக் கட்சியாக “அஃபோர்டபிள் இத்தகா பார்ட்டி”யை உருவாக்கினார். அமெரிக்காவில் பணக்கார வர்க்கத்தின் வேட்பாளர்கள் தங்கள் தோல்விக்குப் பின் மேற்கொள்ளும் வழக்க மான முயற்சி இது. இதன் மூலம் அவர் உண்மையில் தன்னை தொழிலாளர்களின் நலன்களுக்கு அல்ல, முதலாளி வர்க்கத் தின் நலன்களுக்கே அர்ப்பணித்துள்ளார் என்பதை வெளிப்படுத்தினார். சுரெண்டாவுக்கு சுமார் 23 நன் கொடையாளர்கள் இருந்தனர். ஒவ்வொருவரிடமிருந்தும் சராசரி யாக 362 டாலர் அளவில் நன்கொடைகள் வந்தன. மறுபுறம், ஷ்வெட்ஸுக்கு 448 நன்கொடையாளர்கள், அவர்களின் சராசரி நன்கொடை 15.64 டாலர் மட்டுமே. அதில் ஸ்டார்பக்ஸ், கிரீன்ஸ்டார், கிம்மி காபி போன்ற கடைகளின் தொழிலாளர்களிட மிருந்து 500டாலர், கார்னெல் மாணவரி டமிருந்து 15 டாலர், மற்றொரு இளம் தொழி லாளரிடமிருந்து 20 டாலர் போன்ற சிறு தொகை நன்கொடைகளே முக்கியமானவை. ஷ்வெட்ஸின் முக்கியமான வாக்குறுதிகள்: “நியாயமான காரணமின்றி தொழிலா ளர்களை வேலையை விட்டு நீக்கக் கூடாது” என்ற Just Cause Employment Law. தொழிலாளர் உரிமைகள் குழுவை (Workers’ Rights Committee) நகர மட்டத்தில் உருவாக்குதல். வாடகைக் கட்டுப்பாடு, அவசர வாடகை யாளர் பாதுகாப்புச் சட்டம், புதிய வீடமைப்பு திட்டங்களுக்கான மண்டல மாற்றங்கள். • நில உரிமையாளர்கள் வீடுகளை சுகாதார, பாதுகாப்புத் தரங்களுக்குள் பராமரிக்க கடுமையான ஆய்வுகள். • வீடற்றோருக்கான புதிய தங்குமிட திட்டம். • பொதுப் போக்குவரத்துக்கு கூடுதல் வழித்தடங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு நியாயமான ஊதியம். • நீதி மற்றும் சமூக சமத்துவம் குறித்த அவரது வாக்குறுதிகள்: • காவல்துறை மீதான புகார்களை விசாரிக்கும் Community Accountability Board. • கருப்பின சமூகத்துக்கு நஷ்டஈடு வழங்கல், சமூக மையங்களுக்கு நிதி உயர்த்தல். முயற்சியின் விளைவு இந்தக் கொள்கைகள் மற்றும் அவரது ஆழமான தொழிலாளர் வேர்களால், ஷ்வெட்ஸ் 243 வாக்குகள் (64.12%) பெற்று வென்றார். சுரெண்டாவுக்கு 134 வாக்குகள் (35.36%) மட்டுமே கிடைத்தது. இது 2023 தேர்தலை விட சுமார் 19% அதிக வாக்காளர் பங்கேற்பை குறிக்கிறது. அரசியல் மாற்றத்தின் அறிகுறி இந்த வெற்றி, இத்தகா நகரில் இடதுசாரி அரசியலின் ஒரு புதிய அலைக்கு வழி வகுக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்குப் பதிலாக, தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த இளம் பெண் கம்யூனிஸ்ட் ஒருவர் இப்போது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.