articles

img

சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டை ஆகஸ்ட் 1 முதல் 15 வரை கொண்டாடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல்
 

புதுதில்லி, ஆக.1- சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டை ஆகஸ்ட் 1 முதல் 15 வரை கொண்டாடிடு, ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை கட்சியின் அனைத்து அலுவல கங்கள் முன்பும் உயர்த்தி அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையின் வாசகங்களைக் கூறி உறுதிமொழி எடுத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் புதுதில்லியில் ஜூலை 30-31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 அன்று மாலை நடைபெற்ற பத்திரிகையா ளர் சந்திப்பில் மத்தியக்குழு அறிக்கையை வெளியிட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.  அப்போது வெளியிடப்பட்ட மத்தியக்குழு அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு நடந்த பின்னர் கடந்த நான்கு மாத காலத்தில், பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் வகையறாக்களின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல், நவீன தாராளமய சீர்திருத்தங்களை வெறித் தனமாகப் பின்பற்றுவதன் மூலமும், கூட்டுக் கள வாணி முதலாளிகளின் நலன்களை வலுப்படுத்து வதன் மூலமும், மதவெறி-கார்ப்பரேட் கள்ளப் பிணைப்பை அதிகரித்து இந்தியாவின் பொருளாதா ரத்தை மேலும் அரித்துவீழ்த்துவதன் மூலமும், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமை களை ஏற்றிக்கொண்டிருப்பதன் மூலமும் மேலும் மேலும் மூர்க்கத்தனமான முறையில் சென்று கொண் டிருப்பதை ரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

பணவீக்கம்

மொத்த விலைவாசிக் குறியீட்டெண் மற்றும் நுகர் வோர் விலைவாசிக் குறியீட்டெண் ஆகிய இரண்டுமே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்ப தன் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டிருக்கின்றன. பொருளாதா ரத்தில் தேவையின் மட்டங்களை மேலும் குறைத் திருக்கின்றன. உள்நாட்டுத் தேவை சுருங்கியிருப்பது உற்பத்தி நடவடிக்கைகளையும் கீழே தள்ளி, பொருளா தாரத்தை மேலும் மந்தநிலைக்கு இட்டுச்சென்று, வேலை இழப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் இந்தப் பணவீக்கத்தினை உயர்த்துவதற்கும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை களையும் உயர்த்துவதற்கும் இட்டுச் செல்வது தொடர் கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜிஎஸ்டி வரிகள் சமீபத்தில் உயர்த்தப்பட்டிருப்பது, நாள்தோ றும் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் மேலும் உயர்த்தி இருக்கின்றன.

ஜிஎஸ்டி வரி உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான செஸ் வரி/சர்சார்ஜ் வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் யக்குழு கோருகிறது. மோடி அரசாங்கம் இவ்வாறு மக்கள்மீது சுமை களை ஏற்றுவதற்குப் பதிலாக, சூப்பர்-பணக்காரர்கள் மீது வரி விதித்து வருவாயைப் பெருக்கிட வேண்டும்.

வேலையின்மை

20-24க்கு இடைப்பட்ட வயதுடையவர்களில் 42 விழுக்காடு அளவிற்கு வேலையின்மை விகிதம் திகைக்க வைக்கும் விதத்தில் இருந்துவருகிறது. (2020) மக்கள் தொகையில் வேலைசெய்யும் வயதுடைய வர்களில் 90 கோடி பேர்களில் 61.2 விழுக்காட்டினர் வேலை தேடும் வேலையையே விட்டுவிட்டார்கள். தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 38.8 விழுக்காடாகக் குறைந்து விட்டது. இதில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் பெண்களாவார்கள். மோடி ஆட்சியின் கடந்த எட்டாண்டுகளில், அரசு வேலைக ளுக்கு விண்ணப்பித்தவர்களில் வெறும் 0.33 விழுக் காட்டினருக்கு வேலை அளித்திருப்பதாக நாடாளு மன்றத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக இருக்கின்றன. மோடி அரசாங்கம் அனைத்துக் காலிப் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவா தத் திட்டத்தின் கீழான ஒதுக்கீட்டைக் கணிசமாக உயர்த்திட வேண்டும். இவற்றின்மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தினர் தங்கள் உழைப்பு சக்தியை விரயமாக்குவதிலிருந்து தடுத்திட வேண்டும்.

பழங்குடியினர் உரிமைகள்  மீதான தாக்குதல்கள்

மத்தியக் குழு, கிராம சபாக்களின் உரிமைகள், பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசி கள் ஆகியவர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தி லும் தனியார் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் வன நிலங்களை மாற்றுவதற்கு வகை செய்யும் விதத்திலும், புவிவெப்பமயமாதலைக் கட்டுப் படுத்துவதற்கு அரணாக இருந்துவரும் வனத்தையே அழிக்கக்கூடிய விதத்திலும் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் (Forest Conservation Act) விதிகளில் கொண்டுவந்துள்ள திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது.

நாடாளுமன்றத்தின்  மீதான தாக்குதல்

மோடி அரசாங்கம் நாடாளுமன்றத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல் களைத் தொடுத்துக்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற மக்களின் பிரச்சனை கள் எதன்மீதும் விவாதம் நடத்திட மறுத்துவருகிறது. நாடாளுமன்றத்தின் 27 உறுப்பினர்கள் இப்போதைய கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கி றார்கள். சுதந்திர இந்தியாவில் இதற்குமுன் இதுபோன்று நடந்ததே இல்லை. மனித உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் வீராங்கனையும், மதவெறிக்கு எதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிவருபவருமான டீஸ்டா செதல்வாத் கைது செய்யப்பட்டிருக்கும் விதத்தை மத்தியக்குழு கண்டிக்கிறது. இவ்வாறு இவர் கைது செய்யப்படுவ தற்கு மேற்படி தீர்ப்பைக் கூறிய அதே அமர்வாயத்தின் தலைவராக விளங்கிய நீதிபதி அளித்த தீர்ப்பே வசதி செய்து கொடுத்தது. இதேபோன்றே ஜூபேர் அகமது கைது செய்யப் பட்ட விதமும் இருக்கிறது. இவை அனைத்தும் மோடி  அரசாங்கத்தின் கீழ் எவரெல்லாம் வெறுப்பு பேச்சை மேற்கொள்கிறார்களோ, அதன் மூலம் வன்முறை யைத் தூண்டுகிறார்களோ அவர்கள் எல்லாம் பாது காக்கப்படுவார்கள் என்பதும், ஆனால் அவற்றுக் கெதிராக அத்தகைய பேச்சுக்களைத் தோலுரித்துக் காட்டுபவர்களும், உண்மையை மக்கள்முன் வெளிச் சத்திற்குக் கொண்டுவருபவர்களும் கைது செய்யப் பட்டு, சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அடைக்கப்படு வார்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வர்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இதழாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் இன்னமும் கொடூரமான சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டவர்கள் சிறையிலேயே இருந்து வருகிறார்கள். டீஸ்டா செதல்வாத், ஆர்.பி.ஸ்ரீகுமார், பீமா  கொரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருப்ப வர்கள் மற்றும் பலர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்தியக் குழு கோருகிறது.

மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்

ஆளும் கட்சியினரின் அரவணைப்புடன் இந்துத்துவா அமைப்புகள் பல மதவெறித் தீயை விசிறி விடுவது அதிகரித்துக் கொண்டிருப்பதற்கும், பல மாநி லங்களின் வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கும், சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் மத்தியக்குழு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. தில்லியிலும் மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களிலும் புல்டோசர் அரசியல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அழித்து, தங்களுடைய இந்து ராஷ்டிரம் குறிக்கோளை எய்து வதற்காக,  ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களின் விஷத்தைக் கக்கும் வெறுப்புப் பிரச்சாரம் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கும் வன்முறை வெறியாட்டங்க ளை அதிகப்படுத்துவதற்கும் மக்கள் மத்தியில் இட்டுச் சென்றிருக்கிறது. நாடாளுமன்றத்தின் புதியக் கட்டிடத்தின் உச்சி யில், பிரதமர் இந்து மதச் சடங்கை நடத்தி, தேசிய  சின்னத்தைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியரசின் குணாம்சத்தின் மீதான தாக்கு தல் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருப்பதைப் பார்த்தோம். இந்திய அரசும் அரசாங்கமும் இந்துத்து வாவின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்ப தற்கும், இந்தியக் குடியரசின் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அல்ல என்பதற்கும் சரியான அடையாளமாகும்.

இந்திய அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்ப தற்கும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும் மற்றும் நம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கும் மதச் சார்பற்ற எண்ணம் கொண்ட அனைத்து மக்களும் சக்திகளும் அணிதிரள வேண்டும் என்று மத்தி யக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

கேரள நிகழ்ச்சிப்போக்குகள்

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங் கத்தைப் பலவீனப்படுத்திட மத்திய புலனாய்வு  முகமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவ தற்கு மத்தியக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்தையும் முதல்வரையும் குறிவைத்து தொடர் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டிருக்கின் றன. இது பாஜக-வுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.      கேரளாவின் நியாயமான பங்கினை அளிப்பதற்கு மறுத்து, அதற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்திவரும் ஒன்றிய அரசாங்கத்தின் உத்திகளையும் பாகுபாடான கொள்கைகளையும் மத்தியக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத் தைப் பாதுகாப்பதற்கும் அதன் மாற்று மக்கள் ஆதரவு கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றி டவும் தேசம் தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற் கொள்ளவும், மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.

திரிபுரா நிகழ்ச்சிப்போக்குகள்

திரிபுராவில் பொதுவாக மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்க ளுக்கு எதிராகவும் பாஜக மாநில அரசாங்கம் கட்ட விழ்த்துவிட்டுள்ள பாசிஸ்ட் அடக்குமுறைகளை மத்தி யக்குழு கண்டிக்கிறது. மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதையொட்டி மக்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நோக்கத்துடனும், பாஜக மாநில முதல்வரை மாற்றியிருக்கிறது. பாஜக அரசாங்கத்தி ற்கு எதிராகவும், அதன் மதவெறி மற்றும் காட்டாட்சி தர்பாருக்கு எதிராகவும் மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்திருக்கிறது.

வங்க நிகழ்ச்சிப்போக்குகள்

திரிணாமுல் காங்கிரசின் வலுவான பேர்வழியா கவும், மாநில அரசாங்கத்தின் அமைச்சராகவும் இருந்த பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் ஆளெடுப்பில் (teachers recruitment) மேற்கொண்ட ஊழல் கார ணமாகக் கைது செய்யப்பட்டிருப்பது, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் அதன் வன்முறை வெறியாட்ட அரசியலுடன் ஊழலுட னும் ஊறித் திளைத்துக்கொண்டிருக்கிறது என்று கூறி வந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கி றது.  இந்த அமைச்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்  டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுவது மீண்டும் ஒருமுறை திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் விரோத, ஜனநாயக விரோத குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்கு முந்தைய நாரதா சீட்டு நிறுவன ஊழல், சாரதா ஊழல் மற்றும் பல ஊழல்கள் மத்திய புலனாய்வு முகமைக ளால் விசாரிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடது முன்ன ணியும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும்.

மத்தியக்குழு அறைகூவல்கள் 

ஆவது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என்றும், ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை கட்சியின் அனைத்து அலுவலகங்கள் முன்பும் ஏற்றுவதுடன் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள வாசகங்களைக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 1 முதல் 15 வரை மேற்கொள்ளவிருக்கும் கொண்டாட்டத்தின்போது சுதந்திரப் போராட்டத்திலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும், ஜனநாயக உரி மைகள் மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாப்பதி லும் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அரச மைப்புச்சட்ட விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் கம்யூ னிஸ்ட்டுகள் ஆற்றிய ஒளிமிக்க பங்களிப்பினை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

செப்டம்பர் 14 முதல் 24 வரையிலும் பாஜக ஒன்றிய அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது ஏவி வரும் தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இவை தொடர் பாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநிலக் குழுக் களும் துல்லியமான முறையில் நடவடிக்கைகளை திட்ட மிட வேண்டும். இதன் பிரச்சாரம் நிறைவடையும் நாளன்று மாநிலத்தின் தலைநகர்களில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற வேண்டும். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத் தைப் பலவீனப்படுத்திட மேற்கொள்ளப்படும் முயற்சி களுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டிட வேண்டும். இந்தப் பிரச்சாரத்தின்போது இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பின்பற்றிவரும் மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைகளை உயர்த்திப்பிடித்திட வேண்டும். இவ்வாறு மத்தியக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழில்: ச.வீரமணி  

;