சுதந்திர பாலஸ்தீனம் வெகுமதி அல்ல; அது பாலஸ்தீனர்களின் உரிமை! ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் பேச்சு
நியூயார்க், செப். 23 - “பாலஸ்தீனத்தை நாடாக அங்கீ கரிப்பது அந்நாட்டு மக்களின் உரிமை அது அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வெகுமதி அல்ல!” என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணி யோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. அவை துவங்கி 80 ஆண்டு கள் ஆகியுள்ள நிலையில் நியூயார்க்கில் அதன் பொதுச்சபை கூடிய நிலையில், கூட்டத்திற்கு முன்னதாக அந்தோணியோ குட்டரெஸ் இதனைத் தெரிவித்தார். “பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க மறுப்பது எல்லா இடங்களிலும் உள்ள பயங்கரவாதிகளுக்கே பரிசாக இருக்கும். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ‘இரண்டு நாடுகள்’ (பாலஸ்தீனம் - இஸ்ரேல்) என்ற தீர்வை அமல்படுத்தாத வரை மத்திய கிழக்கில் அமைதி இருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீன போர் குறித்து ஆலோசிக்க ஐ.நா. அவையின் தலைமை யகத்தில் உறுப்பு நாடுகளின் கூட்டம் நடை பெற்றது. அதிலும் ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணி யோ குட்டரெஸ் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “இஸ்ரேல் - பாலஸ்தீனர்கள் இடையே நடைபெற்று வரும் மோதல் பல தலைமுறைகளாக தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தையில் நம்பிக்கையற்ற நிலை நிலவி வருகிறது. எத்தனை தீர்மானங்கள் போடப் பட்டாலும் அவை காற்றில் பறக்க விடப்படுகின்றன” என்று ஆதங்கப் பட்டார். மேலும் “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டும் இறையாண்மை கொண்ட சுதந்திர மான நாடுகள் என இருப்பதே இந்த மோதலுக்கு நல்ல தீர்வாக இருக் கும். அனைவரும் தங்கள் அங்கீக ரிக்கப்பட்ட எல்லைக்குள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும். சர்வ தேசச் சட்டம், ஐ.நா தீர்மானத்தின் அடிப்ப டையில் இருநாடுகளும் ஜெருசலேமை தலைநகராக கொண்டிருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வருகின்ற இனப்படு கொலை தாக்குதலில் சுமார் 65 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். மேலும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உருவாக்கியுள்ள பஞ்சத்தின் கார ணமாக குழந்தைகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பட்டினிச் சாவுக்கும் பலியாகி வருகின்றனர். மறுபுறத்தில், ஐநா அவையில் கொண்டு வரப்படும் போர் நிறுத்த தீர்மா னங்களை எல்லாம், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து, தமது வீட்டோ அதி காரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை யிலும் உடன்படாமல் பேச்சுவார்த்தை முடிவுகளை இஸ்ரேல் ஏற்க மறுத்து அடாவடித்தனம் செய்து வருகிறது.
