செவ்வாய், செப்டம்பர் 29, 2020

விளையாட்டு

img

ஐபிஎல் தொடலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்... 

அமிர்தசரஸ் 
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. பலத்த மருத்துவ பாதுகாப்புடன் தொடரில் பங்கேற்கும் 8 அணி வீரர்களும் துபாய் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் சாம்பியனும், நட்சத்திர அந்தஸ்து பெற்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வருகிறது. ஏற்கெனெவே அணியில் உள்ள 2 வீரர்கள் உட்பட 13-க்கும் மேற்பட்ட நபர்களை கொரோனா மிரட்டியது. அவர்கள் அனைவரும் குணமடைந்து தனிமையில், அடுத்து அதிரடி மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா குடுமப் பிரச்சனை  காரணமாக இந்தியா திரும்பினார். 

இதனால் சென்னை ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மூத்த வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான  ஹர்பஜன் சிங்  சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

;