வெள்ளி, அக்டோபர் 30, 2020

விளையாட்டு

img

கிரிக்கெட் வாரியதுடன் மோதல் போக்கு எதிரொலி...  கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் மோர்டசா 

டாக்கா 
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் ஒருநாள் அணியின் கேப்டனுமான மோர்டசாவுக்கும் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்குச் சமீப காலமாக மோதல் போக்கு உருவானது.இந்த மோதல் போக்கு மாத கணக்கில் உருண்டு வரும் நிலையில், மோர்டசாவின் கேப்டன் பதவியை விரைவில் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில்,வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக மோர்டசா அறிவித்துள்ளார்.  

முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில், நாளை நடைபெறும் இந்த கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. வங்கதேச அணி இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் 50 வெற்றிகளை ருசித்த முதல் வங்கதேச கேப்டன் என்ற சாதனையை மோர்டசா படைப்பார். 

;