புதன், அக்டோபர் 21, 2020

விளையாட்டு

img

கேலி செய்த மும்பை நெட்டிசன்கள்...  ருத்ரதாண்டவமாடிய சாம் கர்ரன்... 

மும்பை 
13-வது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்களான சென்னை - மும்பை அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.  

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நாட்டு வீரர் சாம் கர்ரன் (22) தனது வயதிற்கேற்ப அதிரடியாக விளையாடி மும்பை அணி வீரர்களை  துவம்சம் செய்தார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் அசத்திய சாம் கர்ரன்  4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.  2 கேட்ச் பிடித்து பீல்டிங்கிலும் அசத்தினார். குறிப்பாக பேட்டிங்கில் ருத்ரதாண்டவமாடிய சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கும் இவர் தான். சாம் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி  மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை வாயடைக்கச் செய்தார். 

போட்டி தொடங்கும் முன் மும்பை அணி ரசிகர்கள் அவரது வயது மற்றும் தோற்றத்தை கிண்டல் செய்தனர். அவர்களது கிண்டலுக்கு சாம் கர்ரன் தனது வேலையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்திய  விளையாட்டு தொடர்பான டிரெண்டிங்கில் சென்னை அணி வீரர் சாம் தான் டாப் ஆரடரில் உள்ளார்.  

;