வியாழன், அக்டோபர் 1, 2020

விளையாட்டு

img

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று... 

பெல்கிரேட் 
குரோஷிய நாட்டில் நடைபெற்ற பால்கன் அளவிலான கண்காட்சி டென்னிஸ் தொடரில் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த தொடரில் பங்கேற்ற பல்கெரிய நாட்டின் முன்னணி வீரர் டிமிட்ரோவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், பால்கன் டென்னிஸ் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த தொடரில் கலந்துகொண்ட அனைத்து டென்னிஸ் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஆடவர் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்த அதிரடி வீரருமான நோவக் ஜோகோவிச்சும் அந்த டென்னிஸ் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கும்  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவி ஜீலேனாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். எனினும் ஆறுதல் செய்தியாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படவில்லை. 

உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை கொண்ட ஜோகோவிச்சிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

;