செவ்வாய், செப்டம்பர் 29, 2020

விளையாட்டு

img

பிரபல கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று…

பாரீஸ் 
பிரபல கால்பந்து கிளப் அணியும், கால்பந்து உலகின் பணக்கார அணிகளில் ஒன்றான பாரீஸ் செயின்ட்- ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமானதாகும். இந்த அணியில் விளையாடி வரும் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், பிரேசில் அணியின் கேப்டனுமான நெய்மாருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    

இந்த தகவலை பிஎஸ்ஜி அணி தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மேலும் அந்த அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியில்  ஏஞ்ஜெல் டி மரியா (அர்ஜெண்டினா), லியான்றோ (அர்ஜெண்டினா) ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

;