திங்கள், செப்டம்பர் 21, 2020

விளையாட்டு

img

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களுடன் தொடர்ந்து முன்னிலை

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்தாண்டிற்கான சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகளை சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் கூட்டமைப்பு ஜெர்மனியில் நடத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டியின் இறுதிப்போட்டிக்குள் இந்தியாவின் சார்பில் யாரும் விளையாடாத நிலையிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அப்ருவி சந்தேலா தங்கப்பதக்கத்தை வென்றதும், பின்பு திங்கட்கிழமை நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி மற்றும்  மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபாத்தும் தங்கப்பதக்கத்தை வென்றதுமே காரணமாக உள்ளது. மேலும், இவர்கள் மூவரும் 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான வாய்ப்பையும் அடைந்துள்ளனர். தற்போது இந்தியா பதக்கப்பட்டியலில் 3 தங்கப்பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

;