திங்கள், செப்டம்பர் 21, 2020

விளையாட்டு

img

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வெர்மா தங்கம் வென்றார்

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிஷேக் வெர்மா தங்கம் வென்றார்.


சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான International Shooting Sports Federation தலைமையில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 242.7 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் அபிஷேக் வெர்மா தங்கம் வென்றுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட ரஷ்ய வீரர் ஆர்டெம் செர்னௌசௌ_யை விட 2.3 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அபிஷேக் வெர்மா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.


ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அபுர்வி சந்தேலா, சௌரப் சௌத்ரி, அங்சும் மௌட்கில் மற்றும் திவ்யன்ஸ் ஆகியோர் 2020 ஒலிம்பிக்கிற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


;