செவ்வாய், செப்டம்பர் 29, 2020

விளையாட்டு

img

மல்யுத்த வீரர் தீபக் பூனியாவுக்கு கொரோனா... 

சோன்பேட்
ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடருக்காக இந்திய மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பேட் தேசிய முகாமில் பயிற்சிக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் பயிற்சி தொடங்க உள்ள நிலையில், வீரர் - வீராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில், தேசிய அணியின்  இளம் வீரர் தீபக் பூனியாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானாலும் இன்னும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதனால் அவர் வீட்டில் தனிமையில் உள்ளார் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த தகவலை இந்திய விளையாட்டு கழகம் தெரிவித்து உள்ளது. 

ஏற்கெனவே கடந்த மாதம் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;