விளையாட்டு

img

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடப் பாண்டிற்கான பொதுக்குழுக்   கூட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடை பெற்றது. கிரிக்கெட் உலகிற்கு மிகமுக்கிய மான கூட்டம் என்பதால் கிரிக்கெட்  விளையாடும் நாடுகள் ஒருவித அச்சத்து டன் பொதுக்குழு முடிவுகளை எதிர்பார்த்த நிலையில், அரசியல் தலையீடு தொடர்பான விதிகளை மீறியதால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்வதாக வும், தடை உடனடியாக அமலுக்கு வருவ தாக ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக ஐசிசி வெளி யிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் தலையீடு இன்றி கிரிக்கெட் இருக்க வேண்டும் என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரி யத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணித் தேர்வுகளில் பாரபட்சம் காட்டப் ்படுகின்றன. இது ஐசிசி விதிகளை மீறிய செயலாகும். இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல் ஜிம்பாப்வே அணியை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில்  ஜிம்பாப்வே அணி பங்கேற்க முடி யாது. மேலும் ஐசிசி வழங்கும் நிதி களும் நிறுத்திவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெய்லர் வேதனை

ஜிம்பாப்வே தடை விவகாரம் குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர்  பிரெண்டன் டெய்லர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,”ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் எவ்வித அர சியல் தலையீடுகளும் இல்லை. ஆனால் ஐசிசி-யின் இந்த திடீர் முடிவு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த நேர்மையான வீரர்கள், பயிற்சி யாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள் உள்ளிட்டோர் வேலை இழப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு எதிர்காலம் கேள்விக்குரிய தாகியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

ஐசிசி-யின் புதிய விதிகள் 

தாமதமாக பந்து வீசும் போது அணியின் கேப்டன் மட்டுமே தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், இனி கேப்டனுடன் சேர்த்து ஆடும் லெவனில் உள்ள அனைத்து வீரர்களும் பொறுப்பேற்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டியின் போது பலத்த காயம் காரணமாக பேட்டிங் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டால், காயமடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்குபவர்களுக்கு பேட்டிங் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் பந்து வீசவும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்த விதிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. 

 

;