வெள்ளி, அக்டோபர் 30, 2020

விளையாட்டு

img

மகேந்திரசிங் தோனி-யின் ஓய்வு குறித்த தகவல் தவறானது

சர்வதேச போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என இந்திய அணி தலைமை குழு தேர்வாளர் கூறியுள்ளார்.

இது குறித்து தலைமை குழு தேர்வாளர் பிரசாந்த் கூறியதாவது,இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து வரும் தகவல் அனைத்தும் தவறானது.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி தேர்வின் போது ராணுவ பயிற்சிக்கு செல்ல விடுப்பு கேட்டு சென்றுவிட்டார்.தற்போதைய தென்னாப்பிரிக்கா அணி தேர்வின் போது அவர் தேர்வுக்கே கிடைக்கவில்லை என கூறினார்.மேலும் தோனி தனது ஓய்வு குறித்தான எந்த தகவலையும் பிசிசிஐ-யிடம் அளிக்கவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

;