சனி, செப்டம்பர் 26, 2020

விளையாட்டு

img

ஹிந்தி மொழியை கற்கச் சொல்வதா?

வர்ணனையாளர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம்

நாட்டின் முதன்மையான உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்  தொடரில் தற்போது பிளேட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கர்நாடகா - பரோடா அணிகள் மோதிய பிளேட் சுற்று ஆட்டம் பெங்களூ ருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் ஸ்டார் நிறுவனத்தின் இணைய நிறுவனமான ஹாட் ஸ்டார் பிரிவின் ஹிந்தி வர்ணனைக்கு கிரிக்கெட் துறைக்கு சம்பந்தப்பட்ட ரஜிந்தர் அமர்நாத், சுஷில் தோஷி ஆகி யோர் கலந்து கொண்டனர். வர்ணனையின் போது ரஜிந்தர் அமர்நாத், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் ஹிந்தியைக் கண்டிப்பாக அறிந்திருக்கவேண்டும். ஹிந்தி நம் தாய்மொழி. நமக்கு ஹிந்தியை விட சிறந்த மொழி வேறு கிடையாது” என்றார்.

ரஜிந்தர் அமர்நாத்திற்கு ஆதரவாகப் பேசிய சுஷில் தோஷி,”கிரிக்கெட் வீரர்கள் ஹிந்தியில் பேசுவதைப் பெருமையாக எண்ணவேண்டும். நீங் கள் இந்தியாவில் வாழும்போது ஹிந்தி  மொழியைப் பேசவேண்டும் என்றார்.  தமிழகம் போலவே கன்னடர் களுக்கு ஹிந்தியின் பெயரைச் சொன்னாலே பிடிக்காது, அவர்கள் மண்ணில் ஹிந்தியைப் பற்றிப் பேசி னால் சும்மா இருப்பார்களா என்ன? சுஷில் தோஷி,ரஜிந்தர் அமர்நாத்  பேசிய வீடியோவை சமூகவலைத் தளத்தில் கசிய விட நாடு முழுவதும் வெடித்தது சர்ச்சை. கிரிக்கெட் ரசிகர்கள் வர்ணனை யாளர்களின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி  இரு வரையும் வர்ணனையாளர் பணியி லிருந்து நீக்கவேண்டும் என பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  ரசிகர்களின் கொதிப்பைக் கண்டு நடுங்கிய ரஜிந்தர் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களை செய்து வறுத்தெடுத்து விட்டனர். 

;