வியாழன், அக்டோபர் 22, 2020

விளையாட்டு

img

பிசிசிஐ மீது உள்ள களங்கத்தைத் துடைப்பேன்

நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. கடந்த மூன்று ஆண்டுகளாக பிசிசிஐ நல்ல நிலையில் இல்லை. இதனை நிவர்த்தி செய்யவும் பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைத் துடைக்க எனக்கு  கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன். நான்  எந்த ஒரு முடிவை எடுத்தாலும் உறுப்பினர்களிடம் கலந்து  பேசுவேன். அதன் பின்பு  தான் இறுதி முடிவை எடுப்பேன். முதல் தர  கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது  மிகப்பெரிய முன்னுரிமை  ஆகும். பிசிசிஐ-க்குள் போட்டி இருந்தாலும் இல்லாவிட்டா லும், நிதி ரீதியாக இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருப்பதால் பொறுப்பாகச் செயல்பட வேண்டும். எனவே இது ஒரு சவாலான  பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். 

கங்குலி அளித்த பேட்டியிலிருந்து...
 

;