சனி, செப்டம்பர் 26, 2020

விளையாட்டு

img

டேவிட் வார்னருக்கு ஆலன் பார்டர் விருது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் டி-20 போட்டியில் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பெயரில் விருது வழங்கப்படு வது வழக்கம். நடப்பாண்டிற்கான ஆலன் பார்டர் விருதை அதிரடிக்கு பெயர் பெற்ற தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றுள்ளார். வார்னர் ஆலன் பார்டர் விருது வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளார். 2018-ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்திய பிரச்சனையால் ஒரு வருடம் தடையில் இருந்ததால் வெல்ல முடியவில்லை. இதேபோல மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக எல்லிஸ் பெர்ரி பெலிண்டா கிளார்க் விருதைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;