சனி, செப்டம்பர் 26, 2020

விளையாட்டு

img

பிபாவின் உத்தரவால் இன்ப அதிர்ச்சியில் கால்பந்து வீரர்கள்

சம்பளம் தரவில்லையா? நாங்கள் தருகிறோம் 

தற்போதைய கால்பந்து உலகில் 100-க்கும் மேற்பட்ட கால்பந்து கிளப் அணிகள் உள்ளன. கால்பந்து விளையாடும் நாடுகள் இடைவெளி இல்லாமல் ஆண்டு முழுவதும் கிளப் போட்டிகளை நடத்துவதால் கால்பந்து ஆர்வமிக்க கண்டங்களில் எப்பொழுதும் திருவிழா தான். 

பண மழை பெய்யும் இந்த கிளப் தொடர்களில் விளை யாடும் அணிகள்  பெரும்பாலும் செழிப்புடன் இருந்தாலும் அது ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிளப் அணிகள் மட்டுமே. மற்ற கண்டங்களில் வீரர்களுக்கு ஒப்பந்தத்தின் படி முழுமையாகச் சம்பளம் வழங்குவது கிடையாது. இதனால் பல வீரர்கள் வறுமையில் வாடுகின்றனர். 

இந்நிலையில், உலக கால்பந்து குழுவான பிளேயர்ஸ் யூனியன் (பிப்ரோ) மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆகியவை இணைந்து சம்பள பிரச்சனையில் சிக்கியுள்ள வீரர்களுக்காக 16 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 114 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள வருமான ஆதரவை வீரர்களுக்கு வழங்க பிபா திட்டமிட்டுள்ளது. பிபாவின் இந்த அறிவிப்பால் கிளப் அணிகளில் விளையாடும் வீரர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

;