வியாழன், அக்டோபர் 1, 2020

விளையாட்டு

img

ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பானுக்கு விருப்பமில்லை?

விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் தொடரின் 32-ஆவது சீசன் வரும் ஜூலை மாதம் 24-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.   இந்த தொடருக்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா? ஒத்திவைக்கப்படுமா? என்ற சந்தேகங்கள் இன்று வரை எழுந்த வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் ஒருபக்கம் இருந்தாலும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டிக்கும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கும் இடையே உள்ள மோதல் போக்கு தான் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, “இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்கும் எண்ணம் துளியளவும் இல்லை” எனக் கூறுகிறது.ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியோ,”கொரோனா வைரஸ் பரவலைப் பொறுத்துத் தான் ஒலிம்பிக் தொடர் பற்றிச் சிந்திக்க முடியும்” என்ற மனநிலையில் உள்ளது. 

போதாக்குறையாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஏற்பாடுகளைக் கவனித்து வந்த ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கோஜோ தஷிமா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதா? இல்லை ஒலிம்பிக் தொடருக்கு ஆயத்தமாவதா? என்ற இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டு ஜப்பான் அரசு விழிக்கிறது.   ஒலிம்பிக் தொடரை நடத்தும் முக்கிய நிர்வாகியே கொரோனாவால் அவதிப்படும் பொழுது டோக்கியோ ஒலிம்பிக் தொடரை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்ற மனநிலையில் ஜப்பான் அரசு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஜப்பானில் கொரோனா தாக்கம் எப்படி? 

ஜப்பானில் கொரோனா வைரஸ் மிதமான வேகத்தில் பரவி வரு கிறது. தற்போதைய நில வரப்படி ஜப்பானில் 36 பேர் கொரோனா வைரஸுக்கு இரையாகியுள்ளனர். 800-க்கும் அதிகமானோர் பாதிக் கப்பட்டுள்ளனர். வெளி நாடுகளிருந்து வரும் பயணிகள் பெரும்பாலும் கொரோனா அறிகுறி களுடன் வருவதால் சந்தே கத்தின் அடிப்படையில் 16,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயல்பாடு சரியா?

கொரோனா என்னும் புதிய ஆட்கொல்லி வைரஸ் உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து  மிரட்டி வருகிறது. பொருளாதாரம் முதல் விளையாட்டு உலகம் வரை  அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாதது போலச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயல்பாடு பல்வேறு சர்ச் சைகளை உருவாகியுள்ளது. இன்னும் 4 மாத காலம் உள்ளது பார்த்துக்கொள்ள லாம். ஆனால் ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்கும் எண்ணமில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது திட்டத்தில் கறாராக உள்ளது. 

வீரர் - வீராங்கனைகள் பயிற்சி செய்கிறார்களா?

ஒலிம்பிக் தொடரில் பங்குபெறும் நாடுகள் தங்கள் அணியில் பங்குபெறும் வீரர் -வீராங்கனைகளின் பட்டியலை ஏற்கெனவே அறிவித்து விட்டன. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பயிற்சிபெற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி யுள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள வீரர்  - வீராங்கனைகள் ஒலிம்பிக் பற்றிய சிந்தனையே இல்லாமல் கொரோனா தொடர்பான வேலையில் களமிறங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஆப்பிரிக்கா கண்டங்களின் ஒருசில இடங்களில் மட்டும் ஒலிம்பிக் பயிற்சி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. 

 

;