செவ்வாய், செப்டம்பர் 29, 2020

விளையாட்டு

img

ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு...  

துபாய் 
13-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் இல்லாமல் பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்படும் இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான அட்டவணை இன்று (செப்., 6) வெளியாகியுள்ளது. 

அதன்படி செப்டம்பர் 19-ஆம் தொடங்கி நவம்பர் 3-ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அரையிறுதி, குவாலிபயர் போன்ற ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகவிலை. 

சனி, ஞாயிறு நாட்கள் மட்டும் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. மற்ற நாட்களில் ஒரே ஒரு ஆட்டம் தான். இரண்டு ஆட்டங்கள் உள்ள நாட்களில் முதல் ஆட்டம் மாலை 3:30 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் இரவு 7:30 மணிக்கும் தொடங்குகிறது.ஒரே ஒரு ஆட்டம் உள்ள நாட்களில் இரவு 7:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். அபுதாபி,ஷார்ஜா, துபாய் மூன்று நகரில் ஆட்டம் நடைபெறுகிறது. 

* ஐபிஎல் அட்டவணையை பார்க்க... கிரீக்பஸ், இஎஸ்பிஎன் போன்ற விளையாட்டு இணைய தளங்களில் பார்க்கலாம்.  

* முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.  

;