செவ்வாய், அக்டோபர் 27, 2020

விளையாட்டு

img

ஐபிஎல்... தில்லி அணி அசத்தல் வெற்றி...  

துபாய் 
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரின் 30-வது ஆட்டத்தில் (அக்., 14) தில்லி அணி ராஜஸ்தான் அணிகள் மோதின. துபாய் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. மூத்த வீரர் தவான் (57), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் (53) அசத்தலான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் நன்றாக ரன் குவித்தாலும் மிடில் ஆர்டர் வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் இலக்கை எட்டமுடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். தில்லி அணி தரப்பில் துஷார், ஆண்ரிச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.     

;