செவ்வாய், அக்டோபர் 27, 2020

விளையாட்டு

img

ஐபிஎல் : பார்ம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை அணி...  சந்தோச கடலில் மிதக்கும் தமிழக ரசிகர்கள்....   

துபாய் 
13-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 18 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தமிழக அணியுமான சென்னை முதல் ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று, அடுத்த 3 ஆட்டங்களில் தொடர் தோல்வியுடன் பார்ம் இன்றி திணறியது. இதனால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெளியேறுவது உறுதி என கணிப்புகள் கூறின. 

இந்நிலையில் தனது 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிடில் ஆர்டர் வீரர்களின் சிறப்பான ரன் குவிப்பால் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.   

\179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் (ஆஸி.,), டு பிளசிஸ் (தெ., ஆ) பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களை இறக்கிமின்றி பந்தாடினர். இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் இமாலய வெற்றியை குவித்தது. வாட்சன் (83), டு பிளசிஸ் (87) ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினர். 

இழந்த பார்மை மிரட்டலாக விரட்டி புதிய உத்வேகத்துடன் அடுத்த அதிரடியை தொடங்கியுள்ள சென்னை அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களுடன் கோப்பை எங்களுக்கு தான் என மீம்ஸ் அட்டகாசங்களுடன் கொண்டாடி வருகின்றனர்.  

;