விளையாட்டு

img

ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் டாப் 2 இடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 871 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், 855 புள்ளிகளுடன் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தக்கவைத்துள்ளார்.  டி 20 தரவரிசையில் கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். விராட், ரோஹித் முறையே 10, 11 வது இடத்தை பிடித்துள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கைப்பற்றியுள்ளார்.

;