வியாழன், அக்டோபர் 22, 2020

வானிலை

img

நீலகிரிக்கு ‘ரெட் அலர்ட்’ தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை:
கனமழை தொடரும் என்பதால் நீலகிரி மாவட் டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

கனமழை தொடரும் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும். தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

;