வியாழன், அக்டோபர் 1, 2020

வணிகம்

img

அடிவாங்கும் ஆட்டோ மொபைல் துறை.... அமெரிக்காவுக்கு ஓடும் மகிந்திரா நிறுவனம்!

மும்பை:
மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால், இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடும் அடிவாங்கி வருகிறது. 36 சதவிகிதம் வரை வர்த்தக சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நிலைமை சரியில்லாததால், பயன்பாட்டு வாகன உற்பத்திக்கு பெயர் போன மகிந்திரா&மகிந்திரா நிறுவனம், பல மில்லியன் டாலர்களை அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதாவது, மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் துணை அமைப்பான மகிந்திரா ஆட்டோமேடிவ் நார்த் அமெரிக்கா (MANA), ஆகஸ்ட் முதல் வாரத்தில், அமெரிக்காவின் மிச்சிகனில், ஒரு புதிய ஆட்டோமொபைல் பிளாண்ட்டை நிறுவும் வகையில் ரேசர் (RACER) டிரஸ்டுடன் கையெழுத்திட்டுள்ளது. தொழில்துறை மதிப்பீட்டின்படி, மகிந்திரா நிறுவனம் இந்த புதிய பிளாண்ட்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 6 ஆயிரத்து 500 கோடி) முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது. மறுபுறத்தில் இதே நிறுவனம், இந்தியாவில் தனது பணியாளர்கள் 1500 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

;