புதன், செப்டம்பர் 23, 2020

வணிகம்

img

ஆப்பிள்-சாம்சங் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு

சென்னை:
ஆப்பிள், சாம்சங் போன்ற உலகளாவிய மின்னணு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.தற்போது உலகளவில் மின்னணுவியல் துறையில் தலைசிறந்த 13 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை, தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டிம் குக், சாம்சங் நிறுவனத்தின் தலைவர், முதன்மைச் செயல் அலுவலர் கிம் குன் சுக், அமேசான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஜெப் பெசாஸ், எச் பி நிறுவனத்தின் தலைவர், முதன்மைச் செயல் அலுவலர் என்ரிக் உள்ளிட்ட 13 முன்னணி மின்னணுவியல் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வ தில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும்” என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியா விற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், சிறப்பு பணிக் குழுவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் அமைத்துள்ளார்.அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;