திங்கள், செப்டம்பர் 28, 2020

வணிகம்

img

இந்தியாவில் 4 ஆண்டுகளில்  1 பில்லியன் டாலர் சீனா முதலீடு...

2016 ஏப்ரல் மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரையில் சீனாவிலிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரத்து 359 கோடி) இந்தியாவுக்கு வந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மொத்தம் 46 துறைகளில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அதில், எலெக்ட்ரானிக், புக் பிரிண்டிங், சேவைகள் உள்ளிட்ட துறைகளில் மட்டும் 100 மில்லியன்டாலருக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன. அதிகபட்சமாக ஆட்டோமொபைல் துறையில் 172 மில்லியன் டாலர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சேவைகள் துறையில் 139.65 மில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது என்று தாக்குர் குறிப்பிட்டுள்ளார்.

;