வணிகம்

img

ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு புதிய முயற்சி

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு புதிய முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவில், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான பங்கு விலக்கலை அரசு மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதுமாக தனியாரிடம் விற்பதற்கு, அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்காகவும், அதற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு விமான கண்காட்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவிக்கும் பொருத்தமான விண்ணப்பதாரர்கள், ஏர் இந்தியா நிறுவனத்தின் சில குறிப்பிட்ட கணக்குகளைத் தவிர்த்து, மற்ற கணக்கு வழக்குகளை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், விற்பனை சார்ந்து தங்கள் பரிந்துரைகளையும் முன்வைத்துக் கொள்ளலாம் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

;