சனி, செப்டம்பர் 26, 2020

மாவட்டங்கள்

பொதுமுடக்கத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக சட்டதிருத்தங்கள் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

விழுப்புரம், ஆக.3- சுற்றுச்சூழலை நாசமாக்கும் சட்ட திருத்  தங்களை கைவிட வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. மேலும் கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகின்ற 5ஆம் தேதி மாநிலம் தழு விய அளவில் நீதிமன்றங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்  நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு பொதுமுடக்கத்தை பயன் படுத்தி அவசர அவசரமாக பல்வேறு சட்டத்  திருத்தங்களை மேற்கொண்டு வருவதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சட்டத் திருத்தம்  மேற்கொள்ள அமைத்துள்ள குழு தகுதி யற்றது. 22ஆவது சட்ட கமிஷன் உள்ள நிலையில் இந்த குழு தேவையற்றது.

மின்சாரம், சுற்றுசூழல், தொழிலாளர் நலச்சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்க ளில் திருத்தம் மேற்கொள்வதை மத்திய அரசு கைவிட வேண்டும், நீதிபதி கள், பணியாளர்கள் நீதிமன்றத்தில் பணி யாற்றும் போது தகுந்த பாதுகாப்புடன் வழக்க றிஞர்களை அனுமதிக்க வேண்டும், வாழ்வா தாரம் இழந்துள்ள வழக்கறிஞர்களுக்கு உத வும் வகையில் பார்கவுன்சிலுக்கு தமிழக அரசு  50 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். கர்நாடகம், புதுச்சேரி போல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், அரசு சட்டக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என்பதை கைவிட்டு தகுதியான வழக்கறி ஞர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க  வேண்டும், 3 லட்ச ரூபாய் வரை வங்கிகளில் வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். மேற்  கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில  இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

;