வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

மின் கட்டணத்தை முறைப்படுத்த வாலிபர்கள் மனு

 விருதுநகர், ஜூலை 4- விருதுநகர் மாவட்டத்தில் வீடு களுக்கான  மின் கட்டணம் திடீரென பல மடங்கு உயர்ந்ததால் வாடிக்கையாளர் கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, ஏற்கனவே, செலுத்தப்பட்ட மின் கட்டணத்தை வாரியம் வசூலிக்க வேண் டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மின்வாரிய அதிகாரியிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.   இதுகுறித்து அம்மனுவில் கூறிய தாவது : கொரோனா தடுப்பு நடவடிக்கை யாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில் மின் கணக்கீடு வீடு களில் செய்யப்படவில்லை. இதை யடுத்து, நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் அளவீடு செய்யப்பட்டது. இதனால், மின் கட்டணம் பல மடங்கு அதிகமாக செலுத்தும் நிலைக்கு வாடிக்கையாளர் கள் தள்ளப்பட்டனர். மேலும், பூட்டி வைக்கப்பட்ட வீட்டிற்கும் மின் கட்ட ணம் விதிக்கப்பட்டது.  100 யூனிட்டிற்கும் குறைவாக பயன் படுத்தும் வீடுகளுக்கு கூட ரூ.600 முதல் 1000 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் மின் வாரியத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.  எனவே, கொரோனா காலத்தில் முறை யாக கணக்கெடுக்காமல் மொத்தமாக கண்கீடு செய்துள்ளது மின்வாரியமே. கணக்கெடுப்பில்  குளறுபடிகள் உள்ளன. பொது முடக்க காலத்திற்கு முன்பு செலுத்தப்பட்ட மின் கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.  முன்னதாக மின்வாரிய மண்டல அதி காரியை வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எம்.ஜெயபாரத்,நகர் செயலாளர் பி. கருப்பசமி ஆகியோர் நேரில் சென்று மனு வை வழங்கினர்.

;