புதன், செப்டம்பர் 23, 2020

மாவட்டங்கள்

ஆறு பேருக்கு கொரோனா உழவர் சந்தை மூடல்

விருதுநகர், ஆக.3- விருதுநகரில் உள்ள உழவர் சந்தை யில் ஆறு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தால் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப் பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விருதுநகர் மெயின் பஜாரில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலை யம், நகராட்சி மைதானம், கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி, மின்வாரிய அலுவல கம் எதிர்புறம்  மற்றும் உழவர் சந்தை ஆகிய பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு  திரு வில்லிபுத்தூர் பகுதியில் வைரஸ் தொற்றின் பரவல் அதிகமாக இருந்தது. இதற்குக் கார ணம் திருவில்லிபுத்தூர் மார்க்கெட்டில் உள்ள 18 காய்கறி வியாபாரிகளுக்கு தொற்று இருந்ததே என கூறப்பட்டது. இதை யடுத்து, விருதுநகர் மார்க்கெட்டுகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் உழவர் சந்தையில் வியாபாரம் செய்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரி சோதனையில் தெரியவந்தது. இதை யடுத்து,  உழவர் சந்தை முழுவதும் கிருமி நாசினிகளை நகராட்சி ஊழியர்கள் தெளித்த னர். பின்பு, உழவர் சந்தையை தற்காலிக மாக மூடினர்.  

;