திங்கள், செப்டம்பர் 21, 2020

மாவட்டங்கள்

சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பலி

திருவில்லிபுத்தூர், ஆக.3- திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது மேல ராஜகோபாலபுரம். அந்த ஊரைச் சேர்ந்தவர் பாண்டியராஜ்  (32) இவர் சென்னை அசோக் நகர் பகுதியில் தங்கி ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வரு கிறார். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் அவரது சகோதரி வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தவுள்ளார். இதற்காக பாண்டியராஜ் ஆக.1-ஆம் தேதி சென்னையிலிருந்து கடலூர் சென்று அங்கு தனது மனைவி அக்ஷயாபானுவை விட்டுவிட்டு திருவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். திருவில்லிபுத்தூர் மட வார்வளாகம் பகுதியில் செல்லும் போது அங்கு சாலையோரத்தில் இருந்த கல் மண்ட பத்தில் மோதி உயிரிழந்தார். திருவில்லி புத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;