மாவட்டங்கள்

பேச்சு உரிமை, கருத்துரிமையை பறிக்கும் மத்திய அரசு

மன்னார்குடி, செப்.10-  இரண்டாவது முறையாக மத்தி யில் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள பாஜக படிப்படியாக தமது பாசிச கோர முகத்தை அரசின் உயர் பொறுப்பு களில் பதவிவகிப்போரிடம், அரசை விமர்சனம் செய்வோரிடம் மற்றும் ஆட்சியாளர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக்கருத்து கூறுகின்றவர்களிடம் பழிவாங்கும் வகையில் பாஜக அரசு எதேச்சதிகார போக்குடன் நடக்கிறது.  இதனைக் கண்டித்து கர்நாடகாவில் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.ஏஸ் அதிகாரி கள் என இரண்டு பேர், டையூ டாமனில் மாவட்ட ஆட்சியராக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என உயர் பதவியில் உள்ளவர்களின் ராஜி னாமா பட்டியல் நீண்டு கொண்டே போகி றது. அடிப்படை பேச்சுரிமை, கருத்து ரிமை மறுக்கப்படுகிறது என்றும், நிர்வா கத்தை நேர்மையாக செயல்படுத்த இயலவில்லை என்றும், நேர்மையற்ற வழியில் நிர்வாக எந்திரத்தை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்பது இவர்களது குற்றச்சாட்டு.

உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை
குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு தேசத் துரோகத் தடுப்புச் சட்டம் மற்றும் பேச்சுரிமை குறித்து உரையாற்றினார். ஆட்சியா ளர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து தெரிவிப்போரை தேச விரோதி கள் என முத்திரை குத்தும் மோசமான போக்கு நடைபெற்று வருவது ஆரோக் கியமானதல்ல.  மாற்றுக்கருத்து தெரிவிக்கும் உரி மையை அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்து கொடுத்துள்ளது. அதில் உள்ள பிரதான அம்சம் ஒரு நபர் சட்டத்தை மீறாமல், எவ்வித வன்முறையையும் தூண்டாமல் மாற்றுக்கருத்து கூற அவ ருக்கு உரிமை உண்டு. மேலும் நீதி மன்றம் மற்றும் மத்திய மாநில அரசு களின் எந்த ஒரு துறையாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விமர்சனம் செய்ய உரிமை உள்ளது என்றும் பேசியுள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் நீதி பதிகள் நேர்மையாக செயல்பட்டால் பழி வாங்கும் நிலை உள்ளது. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கோவை மாவட்ட தேர்தல் அதி காரி பிரிவில் தேர்தல் பணியில் ஈடுபட்டு, தமது பணியை முடித்து கேரளா பயண மானார். அப்போது அவருக்கு தேர்தல் கால பணியில் கொடுக்க வேண்டிய DA, TA வழங்க அவரை தொடர்பு கொண்டனர்.  அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. “நான் கேரள மாநில அரசில் இருந்து தேர்தல் பணிக்காக கோவை மாவட்டத்தில் பொறுப்பேற்று தேர்தல் பணியை செய்து முடித்துள்ளேன், நான் எனது கடமையைத் தான் செய்தேன். கேரள அரசிடம் மாத ஊதியம் பெறுகிறேன். எனக்கு DA, TA, சம்பளம் வேண்டாம்” என ஐ.ஏ.எஸ்.அதிகாரி தெரிவித்துள் ளார். இது அவரது பணியின் நேர்மை யை உணர்த்துகிறது.  ஆனால் மோடி ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கி மனித உரிமை மீறல் நடைபெறு வது நல்லாட்சி, நல் ஒழுக்கமுள்ள அதி காரிகளின் செயல்பாடுகளை நீர்த் துப்போக வைத்து மன அழுத்தத்துடன் செயல்படும் நிலைமையை உரு வாக்கிவருகிறது. மேலும் காஷ்மீரிகளின் உரிமை கள் மறுக்கப்பட்டு அனைத்து மக்க ளும் திறந்தவெளிச் சிறையில் வைக் கப்பட்டுள்ள நிலைமையில் தாங்கள் தங்களது பதவிகளை துறக்கிறோம் என கண்ணன்கோபிநாதன், சசிகாந்த் செந்தில் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவை யனைத்தும் பாஜக அரசிற்கு எச்ச ரிக்கை மணியாகும்.  இதிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், ஜனநாயகத்தின் மேல் பற்றுள்ள அனைவருடைய வேண்டு கோளாகும். மத்தியில் ஆளும் மதவெறி ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகள் ஒன்றிணைவது காலத் தின் கட்டாயம்.

;